search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐஆர்சிடிசி"

    • ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் இன்று காலை 11 மணியில் இருந்து செயல்படவில்லை.
    • தொழில்நுட்ப கோளாறு காரணமாக இணையதளம் செயல்படாததால் முன்பதிவு செய்யாமல் சிரமப்பட்டனர்.

    சென்னை:

    ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் இன்று காலை 11 மணியில் இருந்து செயல்படவில்லை. சாதாரண முன்பதிவு, தட்கல் முன் பதிவு செய்யக் கூடியவர்கள் இதனால் பாதிக்கப்பட்டனர்.

    நாடு முழுவதும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தை பயன்படுத்தி தினமும் லட்சக்கணக்கானவர்கள் முன்பதிவு செய்கிறார்கள். தொழில்நுட்ப கோளாறு காரணமாக இணையதளம் செயல்படாததால் முன்பதிவு செய்யாமல் சிரமப்பட்டனர்.

    தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணி நடந்து வருவதாகவும் விரைவில் சரி செய்யப்பட்டு முன்பதிவு தொடங்கும் என்றும் ஐ.ஆர்.சி.டி.சி. தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஐ.ஆர்.சி.டி.சி அடித்தள நாள் மற்றும் உலக சுற்றுலா தினத்தையொட்டி விமான டிக்கெட் முன்பதிவு செய்தால் 3 நாட்களுக்கு சலுகை வழங்கியுள்ளது.
    • பல்வேறு வங்கிகளின் கடன் அட்டை மற்றும் டெபிட் கார்டு மூலம் புக்கிங் செய்தால் ரூ.2000 வரை தள்ளுபடி கிடைக்கும்.

    சென்னை:

    இந்தியன் ரெயில்வே சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் (ஐ.ஆர்.சி.டி.சி) அடித்தள நாள் மற்றும் உலக சுற்றுலா தினத்தையொட்டி விமான டிக்கெட் முன்பதிவு செய்தால் 3 நாட்களுக்கு சலுகை வழங்கியுள்ளது.

    ஐ.ஆர்.சி.டி.சி.யின் www.air.irctc.co.in இணையம் வழியாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விமான பயணம் மேற்கொள்ள டிக்கெட் முன்பதிவு செய்தால் சேவை கட்டணம் கிடையாது. பல்வேறு வங்கிகளின் கடன் அட்டை மற்றும் டெபிட் கார்டு மூலம் புக்கிங் செய்தால் ரூ.2000 வரை தள்ளுபடி கிடைக்கும்.

    வருகின்ற நாட்களில் வெளிநாடு பயணம், புத்தாண்டு கொண்டாட்டம் போன்றவற்றிற்காக புக்கிங் செய்பவர்களுக்கு டிக்கெட் தவிர கூடுதலாக எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படாது. இந்த சலுகை இன்று முதல் 27-ந்தேதி வரை வழங்கப்படுவதாக ஐ.ஆர்.சி.டி.சி. தெரிவித்துள்ளது.

    • ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் இன்று காலையில் சரிவர செயல்படவில்லை.
    • டெல்லியில் உள்ள ஐ.ஆர்.சி.டி.சி. தலைமை அலுவலகத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    நாடு முழுவதும் ரெயிலில் பயணம் செய்ய ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் வழியாக முன்பதிவு செய்யப்படுகிறது. தினமும் லட்சக்கணக்கானவர்கள் இந்த இணையதளத்தை பயன்படுத்துகின்றனர்.

    முன்பதிவு மட்டுமின்றி தட்கல் டிக்கெட் பெறவும், முன்பதிவை ரத்து செய்யவும் பெருமளவில் பயன்படுத்துகின்றனர்.

    இந்த நிலையில் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் இன்று காலையில் சரிவர செயல்படவில்லை. அதன் வேகம் குறைந்ததால் முன்பதிவு மற்றும் தட்கல் டிக்கெட் பெறுவதில் சிரமம் ஏற்பட்டது.

    தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஐ.ஆர்.சி.டி.சி.யின் இணையதளமும், செல்போன் செயலியும் முடங்கியது.

    டெல்லியில் உள்ள ஐ.ஆர்.சி.டி.சி. தலைமை அலுவலகத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதனை சரி செய்வதற்கு சில மணி நேரம் ஆகும். இணையதளம் செயல்பாடு சீராகும் வரையில் டிக்கெட் கவுண்டர்களில் சென்று முன்பதிவு செய்யவும், ரத்து செய்யவும் பயணிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று ஐ.ஆர்.சி.டி.சி. அதிகாரிகள் கூறினர்.

    மேலும் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஆஸ்க் திஷா வாய்ப்பை பயன்படுத்தி டிக்கெட் பெறலாம். இ-வால்லெட் என்ற வசதியையும் பயன்படுத்தலாம். இதற்கு பயணிகள் ஐடி மற்றும் பாஸ்வேர்டை செலுத்தி உள்ளே நுழையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • முன்பதிவு செய்யப்படாத பொதுப்பெட்டியில் பயணம் செய்கின்ற பயணிகளுக்கு மலிவு விலையில் உணவு, குடிநீர் வழங்க ரெயில்வே முடிவு செய்து உள்ளது.
    • பொதுப்பெட்டி பயணிகளுக்கான மலிவு விலை உணவு வழங்குவதற்கு ஏற்ற வகையில் ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் வசதி செய்யப்பட உள்ளது.

    சென்னை:

    ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கு குறைந்த விலையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட அளவுக்கு உணவு குறையாமல் அதற்கேற்ற விலையை ஐ.ஆர்.சி.டி.சி. நிர்ணயித்து வசூலிக்கப்படுகிறது.

    டீ, காபி, டிபன், மதிய உணவு உள்ளிட்டவை வெளி இடங்களைவிட குறைவான விலைக்கு விற்கப்படுகிறது.

    மேலும் பயணம் செய்கின்ற ரெயில்களில் முன் பதிவு செய்யப்பட்ட பயணிகளுக்கு ஊழியர்கள் மூலம் உணவு, நொறுக்குத்தீனிகளும் விற்பனை செய்யப்படு கின்றன.

    இந்த நிலையில் முன்பதிவு செய்யப்படாத பொதுப்பெட்டியில் பயணம் செய்கின்ற பயணிகளுக்கு மலிவு விலையில் உணவு, குடிநீர் வழங்க ரெயில்வே முடிவு செய்து உள்ளது. இதற்காக 2 வகை கட்டணத்தில் உணவு வழங்கப்பட உள்ளது.

    முதல் வகை உணவுக்கு ரூ.20 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதில் 7 பூரிகள், உலர் பருப்பு கூட்டு, ஊறுகாய் இடம் பெறும். 2-வது வகை உணவுக்கு ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும். இவை தவிர தென் இந்திய உணவு வகைகளும் வழங்கப்படும்.

    குறிப்பாக அரிசி சாதம், சிவப்பு காராமணி உணவு, மசால்பூரி, கிச்சடி, பட்டுரே, பாவ் பாஜி, மசாலா தோசை ஆகியவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    ரெயில்வே மூலம் பொதுப்பெட்டிகள் வந்து நிற்கும் நடைமேடை பகுதியில் இதற்கான உணவு கவுண்டர்கள் திறக்கப்பட உள்ளது. மேலும் மலிவு விலையில் 200 மில்லி குடிநீர் பாட்டில்களும் வழங்கப்பட உள்ளது. இந்த உணவுகள் ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் தயாரித்து வழங்கப்பட அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    பொதுப்பெட்டி பயணிகளுக்கான மலிவு விலை உணவு வழங்குவதற்கு ஏற்ற வகையில் ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் வசதி செய்யப்பட உள்ளது. முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் ரெயில் நிலையங்களில் வந்து நிற்பதற்கு வசதியாக பிளாட்பாரங்கள் சீரமைக்கப்பட உள்ளது. இந்த உணவு கவுண்டர்கள் சோதனை அடிப்படையில் 6 மாதம் செயல்படும்.

    ரெயில்வே வாரியத்தின் உத்தரவுப்படி முதற்கட்டமாக நாடு முழுவதும் 51 நிலையங்களில் இந்த உணவு கவுண்டர்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளது. இன்று முதல் மேலும் 13 ரெயில் நிலையங்களில் உணவு கவுண்டர்கள் திறக்கப்படும் என்று வாரியம் தெரிவித்து உள்ளது.

    • ஆடி அமாவாசை அன்றும் கயாவில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
    • கட்டணத்தில் தென்னிந்திய சைவ உணவு, பாதுகாவலர் வசதி, பயண காப்புறுதி, தங்குமிடம் போன்றவை அடங்கும்.

    சென்னை:

    இந்தியாவின் ரெயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவன சுற்றுலா பயணிகளுக்காக பாரத் கவுரவ் சுற்றுலா ரெயிலை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் 3 குளிர்சாதன பெட்டிகள், 8 இரண்டாம் வகுப்பு படுக்கை பெட்டிகள் உள்ளன.

    இந்த சுற்றுலா ரெயில் தென் மண்டலம் சார்பில் 'ஆடி அமாவாசை சிறப்பு யாத்திரை' என்ற பெயரில் சுற்றுப்பயணத்தை அறிவித்துள்ளது. ஆடி அமாவாசை அன்றும் கயாவில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த சுற்றுலா ரெயில் நெல்லையில் இருந்து தொடங்கி மதுரை, திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், சென்னை வழியாக காசி திரிவேணி சங்கமம், (அலகாபாத்), உஜ்ஜைனில் உள்ள ஓம்காரேஷ்வரர், மகா காலேஷ்வர் ஜோதிர் லிங்கங்கள் ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷ் ஆகிய புண்ணிய தலங்களுக்கு சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஆகஸ்டு 7-ந்தேதி இந்த சுற்றுலா ரெயில் புறப்படுகிறது. 11 இரவுகள் 12 நாட்கள் கொண்ட இந்த சுற்றுலாவிற்கு ஒருவருக்கு 2-ம் வகுப்பு படுக்கை கட்டணம் ரூ.21,800, 3-ம் வகுப்பு ஏசி படுக்கை கட்ட்டணம் ரூ.39,100 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்த கட்டணத்தில் தென்னிந்திய சைவ உணவு, பாதுகாவலர் வசதி, பயண காப்புறுதி, தங்குமிடம் போன்றவை அடங்கும் என்று ஐ.ஆர்.சி.டி.சி. பொது மேலாளர் கே.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

    • ஐதராபாத், ஆக்ரா, மதுரா, அமிர்தசரஸ், டெல்லி ஆகிய இடங்களுக்கு பயணிகள் அழைத்துச் செல்லப்படுவார்கள்.
    • கோடைகாலத்தில் 2 ரெயில் திட்டங்களை சிறப்பாக நடத்தி முடித்தோம்.

    சென்னை:

    சென்னையில் இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் (சுற்றுலா பிரிவு) பொதுமேலாளர் கே.ரவிகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஐ.ஆர்.சி.டி.சி. சார்பில் 500-க்கும் மேற்பட்ட சுற்றுலா திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி இருக்கிறோம். தற்போது, பிரத்யேக பாரத் கவுரவ் சுற்றுலா திட்டங்களை வழங்கி வருகிறோம். பாரத் கவுரவ் சுற்றுலா திட்டத்தின் கீழ், இதுவரை 2 சுற்றுலா திட்டங்கள் செயல்படுத்தி உள்ளோம். தற்போது, 3-வது சுற்றுலா திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். அதன்படி, ஜூலை 1-ந்தேதி 'ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி யாத்திரை' என்ற பெயரில் சிறப்பு சுற்றுலா ரெயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஐதராபாத், ஆக்ரா, மதுரா, அமிர்தசரஸ், டெல்லி ஆகிய இடங்களுக்கு பயணிகள் அழைத்துச் செல்லப்படுவார்கள். 14 பெட்டிகள் கொண்ட இந்த சுற்றுலா ரெயிலில் 750 பேர் வரையில் பயணம் செய்யலாம். 12 நாட்கள் பயணத்துக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.22 ஆயிரத்து 350 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்த, மேலும் விவரங்களுக்கு 9003140680, 9003140682 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மற்ற சுற்றுலா அமைப்புகளை விட எங்களுடையது மிகவும் சிறப்பானது. இந்திய ரெயில்வே சுற்றுலா ரெயில் திட்டங்களை ஊக்கப்படுத்துகிறது. பயணிகளிடமிருந்து எங்களுக்கு வரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    ஐ.ஆர்.சி.டி.சி சுற்றுலா ரெயில் திட்டத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. கோடைகாலத்தில் 2 ரெயில் திட்டங்களை சிறப்பாக நடத்தி முடித்தோம். தற்போது, இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த முடிவு செய்து இருக்கிறோம். கல்வி சுற்றுலாவுக்காக பள்ளி, கல்லூரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். பாரத் கவுரவ் திட்டத்தில், சுற்றுலா ரெயில் இயக்கத்தில் தனியாருடன் போட்டியிடும் சூழல் தான் இருக்கிறது. ஒடிசா ரெயில் விபத்து சம்பவம் பயணிகளின் எண்ணிக்கையை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. வரும் மாதங்களில் வாரணாசி, அயோத்திக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பயணிகள் தாங்கள் புறப்பட வேண்டிய ரெயில் நிலையத்தில் ரெயிலை பிடிக்க முடியாமல் போகும்போது இந்த வசதி அவர்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டது.
    • குறிப்பிட்ட ரெயில் நிலையத்தில் பயணி ஏறாமல் விட்டு விட்டால் அவரது இருக்கை வேறு யாருக்கும் மாற்றி வழங்கப்படமாட்டாது.

    சென்னை:

    ஆன்லைன் மூலம் டிக்கெட் புக்கிங் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே தங்களது புறப்படும் இடத்தை மாற்றி கொள்ளும் வசதி இருந்தது.

    ரெயில் புறப்பட 4 மணி நேரத்துக்கு முன்பாக அதாவது ரெயிலில் 'சார்ட்' தயாரிப்பதற்கு முன்பு தாங்கள் ரெயில் ஏறும் ரெயில் நிலையத்தை ஐ.ஆர்.சி.டி.சி. வெப்சைட் அல்லது 139 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு மாற்றி கொள்ளும் வசதி இருக்கிறது.

    இந்த வசதி பொது மற்றும் தட்கல் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு பொருந்தும்.

    பயணிகள் தாங்கள் புறப்பட வேண்டிய ரெயில் நிலையத்தில் ரெயிலை பிடிக்க முடியாமல் போகும் போது இந்த வசதி அவர்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டது. ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களது 2019-ம் ஆண்டு மே 1-ந்தேதி இந்த வசதி இருந்தது.

    இந்த நிலையில் இனி ரெயில் நிலையத்தில் எடுத்த டிக்கெட்டிலும் புறப்படும் இடத்தை மாற்றும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக இணையதளமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    ரெயில் புறப்பட 4 மணி நேரத்துக்கு முன்பு ஐ.ஆர்.டி.சி. (www.irctc.co.in) இணையதளத்தில் சென்று அங்கே மெயின் மெனுவுக்கு கீழே இருக்கும் மோர் என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் தற்போது புதிதாக இணைக்கப்பட்டு இருக்கும் கவுண்டர் டிக்கெட் போர்டிங் பாயிண்ட் சேஞ்ச் என்ற வாய்ப்பை கிளிக் செய்யவும்.

    அதில் டிக்கெட் முன்பதிவு செய்ய அளிக்கப்பட்ட செல்போன் எண்ணை அதில் வரும் ஓ.டி.பி.யை பதிவிட்டால் டிக்கெட்டில் குறிப்பிட்ட புறப்படும் இடத்தை மாற்றும் வாய்ப்பு ஏற்படும்.

    இதனால் குறிப்பிட்ட ரெயில் நிலையத்தில் பயணி ஏறாமல் விட்டு விட்டால் அவரது இருக்கை வேறு யாருக்கும் மாற்றி வழங்கப்படமாட்டாது.

    இதனால் முன்பு ரெயில் ஏறுபவர்களுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பு ஐ.ஆர்.டி.சி. இணையதளம் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ ரெயில் நிலையத்துக்கு நேரில் எழுதி கொடுத்தால் தான் ஏறும் ரெயில் நிலையத்தை மாற்ற முடியும் என்ற சிரமம் இருந்ததால் தற்போது அது எளிதாக்கப்பட்டுள்ளது.

    ரெயில் பயணிகளுக்கான டிக்கெட்களில் தற்போது 65 சதவீதம் ஆன்லைன் மூலம் தான் பதிவு செய்யப்படுகிறது என்று புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

    ×