search icon
என் மலர்tooltip icon

    கணினி

    இந்த செயலியை மட்டும் டவுன்லோட் செய்யாதீங்க.. ஐஆர்சிடிசி எச்சரிக்கை!
    X

    இந்த செயலியை மட்டும் டவுன்லோட் செய்யாதீங்க.. ஐஆர்சிடிசி எச்சரிக்கை!

    • ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு ஐஆர்சிடிசி சார்பில் புதிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • பயனர்கள் தப்பித்தவறியும் இவ்வாறு செய்தால், அவர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    ஆண்ட்ராய்டு பயனர்கள் பாதுகாப்பு கருதி ஐஆர்சிடிசி சார்பில் புதிய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு பயனர்கள் "irctcconnect.apk," என்ற பெயர் கொண்ட தரவுகளை தங்களது சாதனங்களில் இன்ஸ்டால் செய்ய வேண்டாம் என்று ஐஆர்சிடிசி கேட்டுக் கொண்டுள்ளது. இந்த தரவுகளை டவுன்லோட் செய்யும் பட்சத்தில் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களுக்கு பாதிப்பு ஏற்படலாம்.

    வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற தளங்களின் மூலம் இந்த தரவு வேகமாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் இதில் போலி வலைதளமான https://irctc.creditmobile.site முகவரியும் இணைக்கப்பட்டு இருக்கிறது.

    ஐஆர்சிடிசி வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி இந்த தரவை டவுன்லோட் செய்தால், உங்களது ஸ்மார்ட்போனில் அது மால்வேரை இன்ஸ்டால் செய்துவிடும். https://irctc.creditmobile.site வலைதளம் தோற்றத்தில் ஐஆர்சிடிசி வலைதளம் போன்றே காட்சியளிக்கிறது. இதில் உங்களின் தனிப்பட்ட விவரங்களை பதிவிட்டால், ஹேக்கர்கள் அவற்றை தவறாக பயன்படுத்தும் அபாயம் உள்ளது.

    இந்த தளத்தை உருவாக்கிய ஹேக்கர்கள் ஐஆர்சிடிசி அதிகாரிகளாக அறிமுகப்படுத்திக் கொண்டு பயனர்களிடம் ஆண்ட்ராய்டு செயலி ஒன்றை டவுன்லோட் செய்ய வலியுறுத்தி வருகின்றனர். இதன் மூலம் பயனர்களின் தனிப்பட்ட வங்கி விவரங்களான நெட் பேங்கிங் பெயர், கடவுச்சொல், யுபிஐ முகவரி, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு விவரங்களை அபகரிக்க முயற்சிக்கின்றனர்.

    இந்த ஐஆர்சிடிசி முறைகேடில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?

    போலி செயலிகளை டவுன்லோட் செய்ய வேண்டாம் என்று ஐஆர்சிடிசி சார்பில் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்யும் போது வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்படும் வாய்ப்புகள் அதிகம் ஆகும். இதுபோன்ற முறைகேடில் சிக்காமல் இருக்க பயனர்கள் ஐஆர்சிடிசி செயலியை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து மட்டுமே டவுன்லோட் செய்ய வேண்டும்.

    மேலும் ஐஆர்சிடிசி சார்பில் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களான (கடவுச்சொல்), கிரெடிட் கார்டு எண், ஒடிபி, வங்கி கணக்கு எண் அல்லது யுபிஐ உள்ளிட்டவைகளை மொபைல் போன் மூலம் கேட்கப்படாது.

    Next Story
    ×