search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் முடக்கம்- பயணிகள் அவதி
    X

    ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் முடக்கம்- பயணிகள் அவதி

    • ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் இன்று காலையில் சரிவர செயல்படவில்லை.
    • டெல்லியில் உள்ள ஐ.ஆர்.சி.டி.சி. தலைமை அலுவலகத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    நாடு முழுவதும் ரெயிலில் பயணம் செய்ய ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் வழியாக முன்பதிவு செய்யப்படுகிறது. தினமும் லட்சக்கணக்கானவர்கள் இந்த இணையதளத்தை பயன்படுத்துகின்றனர்.

    முன்பதிவு மட்டுமின்றி தட்கல் டிக்கெட் பெறவும், முன்பதிவை ரத்து செய்யவும் பெருமளவில் பயன்படுத்துகின்றனர்.

    இந்த நிலையில் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் இன்று காலையில் சரிவர செயல்படவில்லை. அதன் வேகம் குறைந்ததால் முன்பதிவு மற்றும் தட்கல் டிக்கெட் பெறுவதில் சிரமம் ஏற்பட்டது.

    தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஐ.ஆர்.சி.டி.சி.யின் இணையதளமும், செல்போன் செயலியும் முடங்கியது.

    டெல்லியில் உள்ள ஐ.ஆர்.சி.டி.சி. தலைமை அலுவலகத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதனை சரி செய்வதற்கு சில மணி நேரம் ஆகும். இணையதளம் செயல்பாடு சீராகும் வரையில் டிக்கெட் கவுண்டர்களில் சென்று முன்பதிவு செய்யவும், ரத்து செய்யவும் பயணிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று ஐ.ஆர்.சி.டி.சி. அதிகாரிகள் கூறினர்.

    மேலும் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஆஸ்க் திஷா வாய்ப்பை பயன்படுத்தி டிக்கெட் பெறலாம். இ-வால்லெட் என்ற வசதியையும் பயன்படுத்தலாம். இதற்கு பயணிகள் ஐடி மற்றும் பாஸ்வேர்டை செலுத்தி உள்ளே நுழையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×