என் மலர்
நீங்கள் தேடியது "தட்கல் முறை"
- தட்கல் டிக்கெட்களும் எளிதாக கிடைப்பது இல்லை.
- 2.5 கோடி போலி கணக்குகளை கண்டறிந்து IRCTC நீக்கியது.
நாடு முழுவதும் ரெயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாதுகாப்பான பயணத்துடன் கட்டணமும் குறைவாக இருப்பதால் பெரும்பாலானவர்கள் ரெயில் பயணத்தை விரும்புகிறார்கள். இதனால் ரெயிலில் இடம் கிடைப்பது அரிதாக உள்ளது.
பண்டிகை காலம், விசேஷ நாட்களில் பயணம் செய்வது பெரும் சவாலாக உள்ளது. ஆன்லைன் வழியாக பெரும்பாலானவர்கள் முன்பதிவு செய்வதால் கவுண்டர்களில் வரிசையில் நின்று பெறுவது கடினமாக உள்ளது. தட்கல் டிக்கெட்களும் எளிதாக கிடைப்பது இல்லை.
இந்நிலையில் தட்கல் டிக்கெட் முன்பதிவில் முறைகேடு நடப்பதாக ரெயில்வே துறைக்கு பல்வேறு புகார்கள் எழுந்தன.
இதனையடுத்து தட்கல் டிக்கெட் மோசடி தொடர்பாக 2.5 கோடி போலி கணக்குகளை கண்டறிந்து IRCTC நீக்கியது.
இந்நிலையில், தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு விரைவில் இ-ஆதார் பயன்படுத்தப்படும் என ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.
- தட்கல் டிக்கெட் முன்பதிவில் முறைகேடு நடப்பதாக ரெயில்வே துறைக்கு பல்வேறு புகார்கள் எழுந்தன.
- தட்கல் டிக்கெட்டு சாதாரணமாக கிடைப்பது இல்லை.
நாடு முழுவதும் ரெயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாதுகாப்பான பயணத்துடன் கட்டணமும் குறைவாக இருப்பதால் பெரும்பாலானவர்கள் ரெயில் பயணத்தை விரும்புகிறார்கள். இதனால் ரெயிலில் இடம் கிடைப்பது அரிதாக உள்ளது.
பண்டிகை காலம், விசேஷ நாட்களில் பயணம் செய்வது பெரும் சவாலாக உள்ளது. ஆன்லைன் வழியாக பெரும்பாலானவர்கள் முன்பதிவு செய்வதால் கவுண்டர்களில் வரிசையில் நின்று பெறுவது கடினமாக உள்ளது. தக்கல் டிக்கெட்களும் எளிதாக கிடைப்பது இல்லை.
பொதுமக்கள் அவசர பயணம் மேற்கொள்வதற்காக கூடுதல் கட்டணம் செலுத்தி தட்கல் டிக்கெட் எடுக்க முயன்றாலும் எளிதாக கிடைப்பது இல்லை. எல்லா வகுப்புகளிலும் அனைத்து இடங்களும் நிரம்பி விடுகின்றன. தட்கல் டிக்கெட்டும் சாதாரணமாக கிடைப்பது இல்லை.
இந்நிலையில் தட்கல் டிக்கெட் முன்பதிவில் முறைகேடு நடப்பதாக ரெயில்வே துறைக்கு பல்வேறு புகார்கள் எழுந்தன.
இதனையடுத்து தட்கல் டிக்கெட் மோசடி தொடர்பாக 2.5 கோடி போலி கணக்குகளை கண்டறிந்து IRCTC முடக்கியுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- தட்கல் முறையில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கும், முன்னுரிமை அடிப்படை யில் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும்.
- விவசாய மின் இணைப்பு பெற தங்கள் பகுதி செயற்பொறியாளர் இயக்குதல் மற்றும் பராமரித்தல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.
தருமபுரி,
தருமபுரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் தமிழ்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
தமிழக முதல்-அமைச்சர் அறிவுறுத்தலின்பேரில், விவசாய மின் இணைப்பு பெற காத்திருப்பு பட்டியலில் உள்ள விருப்பமுள்ள விண்ணப்ப தாரர்கள், விரைந்து விவசாய மின் இணைப்பு பெறும் வகையில், விரைவு தட்கல் மின் இணைப்பு வழங்கல் திட்டம், கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
தட்கல் முறையில் ஏற்கனவே பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கும், தற்போது தட்கல் முறையில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கும், முன்னுரிமை அடிப்படையில் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும்.
எனவே, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில், ஏற்கனவே விவசாய மின் இணைப்புகோரி பதிவு செய்துள்ள விவசாயிகள், தட்கல் சிறப்பு திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு பெற தங்கள் பகுதி செயற்பொறியாளர் இயக்குதல் மற்றும் பராமரித்தல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






