என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாய மின் இணைப்பு"

    • 3,348 விவசாயிகளுக்கு புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
    • ரூ.10,000, ரூ.25,000, ரூ.50,000- என 3 வகைகளில் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படுகின்றன.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் சார்பில் விவசாயிகளுக்கு 50,000 புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ், 2022-2023ஆம் ஆண்டிற்கு இதுவரை 3,348 விவசாயிகளுக்கு புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளதாவது:-

    தருமபுரி மாவட்டத்தில் மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் சார்பில் விவசாயிகளுக்கு 50,000 புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ், 2022-2023ஆம் ஆண்டிற்கு 5,374 புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 3,348 விவசாயிகளுக்கு புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

    மேலும், விவசாயமின் இணைப்பு திட்டங்களை பொருத்தவரை சாதாரண பிரிவில் மின்இணைப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. சுயநிதிபிரிவில் மின்இணைப்பு பெற ரூ.10,000, ரூ.25,000, ரூ.50,000- என 3 வகைகளில் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படுகின்றன.

    சுயநிதி பிரிவில் கட்டணம் செலுத்தி பதிவுசெய்த பிறகும் மின்இணைப்புக்காக காத்திருக்கும் விவசாயிகளுக்கு விரைவாக இணைப்பு வழங்குவதற்காக 2018-ல் தட்கல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

    இதில், 5 குதிரைத் திறன் உள்ள மின்மோட்டாருக்கு இணைப்பு வழங்க ரூ.2.50 லட்சம், 7.50 குதிரைத் திறனுக்கு ரூ.2.75 லட்சம், 10 குதிரைத் திறனுக்கு ரூ.3 லட்சம், 15 குதிரைத் திறனுக்கு ரூ.4 லட்சம் என 3 வகைகளில் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படுகின்றன.

    தருமபுரி மாவட்டத்தில் விவசாயமின் இணைப்பு வழங்குவதை துரிதப்படுத்த தருமபுரி மின்பகிர்மான வட்டம் தருமபுரி, பாலக்கோடு, அரூர் மற்றும் கடத்தூர் ஆகிய கோட்டத்திற்கு உட்பட்ட விவசாய விண்ணப்பதார்களுக்கு மின்வாரிய விதிமுறைக்கு உட்பட்டு பெயர் மற்றும் சர்வே எண் உட்பிரிவு மாற்றம் மற்றும் சர்வே எண், கிணறு மாற்றம் செய்து கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தட்கல் முறையில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கும், முன்னுரிமை அடிப்படை யில் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும்.
    • விவசாய மின் இணைப்பு பெற தங்கள் பகுதி செயற்பொறியாளர் இயக்குதல் மற்றும் பராமரித்தல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.

    தருமபுரி,

    தருமபுரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் தமிழ்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் அறிவுறுத்தலின்பேரில், விவசாய மின் இணைப்பு பெற காத்திருப்பு பட்டியலில் உள்ள விருப்பமுள்ள விண்ணப்ப தாரர்கள், விரைந்து விவசாய மின் இணைப்பு பெறும் வகையில், விரைவு தட்கல் மின் இணைப்பு வழங்கல் திட்டம், கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

    தட்கல் முறையில் ஏற்கனவே பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கும், தற்போது தட்கல் முறையில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கும், முன்னுரிமை அடிப்படையில் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும்.

    எனவே, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில், ஏற்கனவே விவசாய மின் இணைப்புகோரி பதிவு செய்துள்ள விவசாயிகள், தட்கல் சிறப்பு திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு பெற தங்கள் பகுதி செயற்பொறியாளர் இயக்குதல் மற்றும் பராமரித்தல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×