செய்திகள்

ஊட்டியில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் முகாம்

Published On 2018-03-16 14:53 GMT   |   Update On 2018-03-16 14:53 GMT
ஊட்டியில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் முகாம் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்றது.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் உதகை பழங்குடியினர் பண்பாட்டு மைய வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் முகாம் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்றது. நலத்திட்ட உதவிகள் வழங்கி அவர் பேசியதாவது,

மாற்றுத்திறனாளிகள் முகாமானது ஒவ்வொரு மாதமும் நடைபெற்று வருகிறது. இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, உதவி உபகரணங்கள், சுய தொழில் தொடங்க கடனுதவி, பெட்ரோல் ஸ்கூட்டர் ஆகியவை குறித்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 40 மனுக்கள் பெறப்பட்டது என்றார்.

மேலும் கலெக்டரிடம் அளித்த இம்மனுக்களின் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்க உத்தர விட்டார்.

இம்முகாமில் தாட்கோ மூலம் மாவட்ட கலெக்டரின் விருப்புரிமை நிதியிலிருந்து பெட்டிகடை வைக்க ஒரு நபருக்கு தலா ரூ.20 ஆயிரம் வீதம் 4 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.80ஆயிரத் திற்கான காசோலைகளை கலெக்டர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கரபாண்டியன், மாற்றுத் திறனாளி நல அலுவலர் விக்டர் மரிய ஜோசப், தாட்கோ மாவட்ட மேலாளர் ரவிசந்திரன் அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews

Tags:    

Similar News