செய்திகள்

காவிரி வழக்கின் தீர்ப்பு விவசாயிகள் நலனை பாதிக்கும்- ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

Published On 2018-02-16 15:06 GMT   |   Update On 2018-02-16 15:06 GMT
காவிரி வழக்கின் தீர்ப்பு விவசாயிகள் நலனை பாதிப்பதால், மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்க வேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன் பேட்டியில் கூறியுள்ளார். #gramakrishnan #Cauveryverdict #farmers

தூத்துக்குடி:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி நீர் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு கூறியுள்ளது. இந்த தீர்ப்பு தமிழக விவசாயிகள் நலனுக்கு எதிராக அமைந்துள்ளது. காவிரி நீர் எந்த மாநிலத்திற்கும் சொந்தம் கிடையாது. என்ற உத்தரவு வரவேற்கத்தக்கது.

கர்நாடக அரசு இனிமேல் புதிதாக அணை கட்ட முடியாது என்ற உத்தரவும் வரவேற்கத்தக்கது. காவிரி நதிநீரை நம்பி நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்ட விவசாயிகள் உள்ளனர். இவர்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு காவிரி நீர் குறைக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும்.

இதற்கு உச்சநீதிமன்றமும் வாய்ப்பு வழங்க வேண்டும். நீர் குறைப்பு என்ற உத்தரவால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews #gramakrishnan #Cauveryverdict #farmers

Tags:    

Similar News