செய்திகள்

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு: தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை ஐகோர்ட்

Published On 2018-01-23 10:04 GMT   |   Update On 2018-01-23 10:04 GMT
18 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

அ.தி.மு.க.வில் டி.டி.வி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் கடந்தாண்டு செப்டம்பர் 18-ம் தேதி நடவடிக்கை எடுத்தார். சபாநாயகரில் உத்தரவை எதிர்த்து 18 பேரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் மனுதாரர்களின் வாதங்கள், அரசுத்தரப்பு வாதங்கள் நடந்து முடிந்ததை அடுத்து, அனைத்து தரப்பிலும் இருந்து எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல் இன்று செய்யப்பட்டன. இதனையடுத்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தலைமை நீதிபதி இந்திரா பாணர்ஜி தலைமையிலான அமர்வு ஒத்தி வைத்தது.
Tags:    

Similar News