search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம் எல் ஏ"

    • வாலிபர் ஒருவர் தனது பாக்கெட்டில் இருந்த மின் டெட்டனைட்டர் குண்டை எம்.எல்.ஏ.வின் காரின் மீது வீசினார்.
    • எம்.எல்.ஏ.வின் கார் மீது எதற்காக குண்டு வீசினார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டம், பெனுகொண்டா ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சங்கர நாராயணன்.

    இவர் நேற்று மாலை கட்டம்தண்டா பஞ்சாயத்து குட்பட்ட கல்வி தண்டா பெனுகொண்டா உள்ளிட்ட பகுதிகளில் அரசு திட்டங்கள் குறித்து பொது கூட்டங்களில் பேசினார்.

    பின்னர் தனது காரில் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது அங்கிருந்த வாலிபர் ஒருவர் தனது பாக்கெட்டில் இருந்த மின் டெட்டனைட்டர் குண்டை எம்.எல்.ஏ.வின் காரின் மீது வீசினார். டெட்டனெட்டர் வெடிக்காததால் அதிர்ஷ்டவசமாக எம்.எல்.ஏ உயிர் தப்பினார்.

    பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் துரிதமாக செயல்பட்டு காரின் மீது குண்டு வீசிய வாலிபரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

    அங்கு வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் குடிப்பள்ளியை சேர்ந்த கணேஷ் என்பதும் பாலசமுத்திரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவர் மற்றும் டெட்டனேட்டர் ஆபரேட்டராக செயல்பட்டது தெரியவந்தது.

    கணேஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். எம்.எல்.ஏ.வின் கார் மீது எதற்காக குண்டு வீசினார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டெல்லி தலைமை செயலாளர் அன்ஷு பிரகாஷ் தாக்கப்பட்ட விவகாரத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். #DelhiChiefSecretary #ArvindKejriwal
    புதுடெல்லி:

    டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. சிவிக்லைனில் உள்ள கெஜ்ரிவால் இல்லத்தில் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 19-ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் அன்ஷு பிரகாஷ் பங்கேற்றார்.

    கூட்டத்தின் போது வார்த்தைகள் மோதலால் தலைமை செயலாளரை ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் தன்னை தாக்கியதாக தலைமை செயலாளர் அன்ஷு பிரகாஷ் துணை நிலை கவர்னர் அனில் பைஜாலை நேரில் சந்தித்து புகார் கொடுத்தார்.



    எம்.எல்.ஏ.க்கள் அஜத்தத், பிரகாஷ் ஜார்வால் ஆகியோர் தன்னை தாக்கியதாகவும், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கவர்னரிடம் வலியுறுத்தி இருந்தார்.

    இது தொடர்பாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக வருகின்ற வெள்ளிக்கிழமை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. #DelhiChiefSecretary #ArvindKejriwal

    ×