செய்திகள்

ஊத்துக்கோட்டை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீவிபத்து

Published On 2018-01-21 10:18 GMT   |   Update On 2018-01-21 10:18 GMT
ஊத்துக்கோட்டை அருகே பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் கருகி சாம்பலாயின.
ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை அருகே உள்ள காசிரெட்டி பேட்டை கிராமத்தை சேர்நதவர் செந்தில். இவர் தாசுகுப்பம் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்கும் கடை நடத்தி வருகிறார். அருகிலேயே குடோனும் உள்ளது.

நேற்று இரவு கடையை மூடி செந்தில் சென்றார். இன்று அதிகாலை 3 மணி அளவில் குடோனில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென பரவி கிடங்கு முழுவதும் தீப்பற்றியது. சுமார 10 அடி உயரத்துக்கு கரும்புகை எழும்பின.

தகவல் அறிந்ததும் தேர்வாய்கண்டிகையில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் கருகி சாம்பலாயின.

தீ விபத்து நடந்த பிளாஸ்டிக் கிடங்கு அருகே ஆந்திர அரசின் மதுக்கடை உள்ளது. இங்கு மது அருந்தியவர்கள் யாராவது போதையில் குடோனுக்கு தீ வைத்தனரா? அல்லது மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? என்று சத்தியவேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News