செய்திகள்
ஆர்ப்பாட்டத்தில் விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் மற்றும் பலர் பங்கேற்றனர்

பட்டாசு தொழிலை பாதுகாக்க கோரி விஜயகாந்த் தலைமையில் தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்

Published On 2018-01-21 07:28 GMT   |   Update On 2018-01-21 07:28 GMT
பட்டாசு தொழிலை பாதுகாத்திடவும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் கோரி சிவகாசி பாவடி தோப்பு திடலில் இன்று விஜயகாந்த் தலைமையில் தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #DMDK
சிவகாசி:

சுற்றுச்சூழல் விதியில் இருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க வேண்டும், பட்டாசு தடை தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 25 நாட்களாக பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன.

இதன் காரணமாக பட்டாசு மற்றும் அதன் உபதொழிலை நம்பி இருக்கும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகாசியில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், ரெயில் மறியல் போன்ற போராட்டங்கள் நடந்தன.

தற்போது வேலை நிறுத்தம் வாபசாகி உள்ளது. நாளை (திங்கட்கிழமை) முதல் தொழிலாளர்கள் வேலைக்கு செல்கின்றனர்.

இந்த நிலையில் பட்டாசு தொழிலை பாதுகாத்திடவும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் கோரி சிவகாசி பாவடி தோப்பு திடலில் இன்று தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமை தாங்கினார். இதில் பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பட்டாசு தொழிலாளர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். #Tamilnews
Tags:    

Similar News