செய்திகள்

பலியான 14 போலீசார் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் உதவி: முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

Published On 2018-01-20 08:54 GMT   |   Update On 2018-01-20 08:54 GMT
உடல்நலக்குறைவு மற்றும் சாலை விபத்தில் பலியான 14 போலீசார் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் காவல் நிலையத்தில் முதல் நிலைக்காவலராகப் பணிபுரிந்து வந்த செந்தில்குமார் உடல்நலக்குறைவால் காலமானார்.

தேனி மாவட்டம், தேனி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த மாரிச்சாமி சாலை விபத்தில் உயிரிழந்தார்.

மதுரை மாநகரம், கரிமேடு போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சுந்தர் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம், குத்தாலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த குமார் உடல்நலக்குறைவால் காலமானார்.

ஈரோடு மாவட்டம், கொடுமுடி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ராஜு உடல்நலக் குறைவால் காலமானார்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த வனராஜா சாலை விபத்தில் உயிரிழந்தார்.

திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு சிறப்பு காவல் 12ம் அணியில் இரண்டாம் நிலை காவலராகப் பணிபுரிந்து வந்த தங்கசாமி உடல்நலக் குறைவால் காலமானார்.

தூத்துக்குடி மாவட்டம், ஆயுதப்படையில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ஜான்சிராணி உடல்நலக் குறைவால் காலமானார்.

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சிவகுமார் உடல்நலக் குறைவால் காலமானார்.

நாகப்பட்டினம் மாவட்டம், கரியாப்பட்டினம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் (பயிற்சி) பணிபுரிந்து வந்த பால சுப்ரமணியன் உடல்நலக் குறைவால் காலமானார்.

காஞ்சிபுரம் மாவட்டம், கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த குணசேகரன் உடல்நலக் குறைவால் காலமானார்.

கடலூர் மாவட்டம், மந்தாரக்குப்பம் காவல் நிலையத்தில் பயிற்சி உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சேகர் உடல்நலக் குறைவால் காலமானார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சண்முகம் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த வரதராஜ பெருமாள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

மேற்கண்ட பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த மேற்கண்ட 14 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #TamilNews
Tags:    

Similar News