செய்திகள்

2ஜி வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு இறுதியானதல்ல - அமைச்சர் ஜெயக்குமார்

Published On 2017-12-21 09:13 GMT   |   Update On 2017-12-21 09:13 GMT
டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் 2 ஜி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு இறுதியானதல்ல என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை:

2 ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க சி.பி.ஐ. தரப்பு தவறிவிட்டது என நீதிபதி சைனி தெரிவித்தார். நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை தி.மு.க.வினர் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் 2 ஜி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு இறுதியானதல்ல என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட 2 ஜி தீர்ப்பை விமர்சிக்கக் கூடாது. இது இறுதியான தீர்ப்பும் இல்லை மேல்முறையீடு செய்ய அனைத்து தகுதிகளும் 2 ஜி வழக்கில் உள்ளன. எனவே, மேல்முறையீடு செய்யும்போது நல்ல தீர்ப்பு வர வாய்ப்பு உள்ளது.
 
முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற முறையை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ளது. டிடிவி தினகரனும் தி.மு.க.வும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்; அதனால் இந்த தீர்ப்பை பாராட்டவே செய்வார்கள் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News