search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு நீதிமன்றம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • செந்தில் பாலாஜி உள்பட 47 பேர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
    • கூடுதல் குற்றப்பத்திரிகையில் அரசு அதிகாரிகள், போக்குவரத்து ஊழியர்கள் என சுமார் 900 பேர் சேர்த்துள்ளதால் அனுமதி கிடைப்பதில் தாமதம்.

    போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு தொடர்ந்தது. இதை தொடர்ந்து செந்தில் பாலாஜி உள்பட 47 பேர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இவ்வழக்கு இன்று சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை விசாரணை அனுமதிக்கான ஒப்புதல் கடிதம் இன்னும் கிடைக்கவில்லை. கூடுதல் குற்றப்பத்திரிகையில் அரசு அதிகாரிகள், போக்குவரத்து ஊழியர்கள் என சுமார் 900 பேர் சேர்த்துள்ளதால் அனுமதி கிடைப்பதில் தாமதம் எனவும் வழக்கு நடத்துவதற்கான அனுமதி தமிழக அரசிடம் இருந்து இன்னும் கிடைக்கவில்லை என மத்திய குற்றப்பிரிவு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து வழக்கு விசாரணை ஏப்ரல் 4-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

    • சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார்.
    • இரு வழக்குகளும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று விசாரணைக்கு வந்தன.

    சென்னை:

    கடந்த 2008-ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு, ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக கடந்த 2012-ம் ஆண்டு, அ.தி.மு.க. ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து சென்னையில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார்.

    இதேபோல 2001-2006ம் ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த வளர்மதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருந்து வளர்மதி உள்ளிட்டோரை விடுவித்து ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டு, 2012-ம் ஆண்டு உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார்.

    இந்த இரு வழக்குகளும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று விசாரணைக்கு வந்தன.

    இந்த 2 வழக்குகளுக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை, அமைச்சர் ஐ .பெரியசாமி, முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 12-ந்தேதிக்கு தள்ளி வைத்து உள்ளார்.

    • அமலாக்கத்துறை அதிகாரிகள் ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டார்
    • சிறைக்காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில் ஆஜர்படுத்தப்பட இருக்கிறார்

    அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    உச்சநீதிமன்றம் அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்தது. அதனைத் தொடர்ந்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தது.

    செந்தில் பாலாஜியிடம் ஐந்து நாட்கள் விசாரணை நடத்திய பின், மீண்டும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

    சிறைக்காவல் இன்றுடன் முடிவடைய இருக்கிறது. இதற்கிடையே, செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    அதனடிப்படையில் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி எல்.எல்.ஏ., எம்.பி. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருக்கிறார்.

    அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி மீது அவதூறு வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், அவர் காலமானதால் அனைத்து வழக்குகளும் முடித்து வைத்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Karunanidhi
    சென்னை:

    எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சமீபத்தில் சென்னையில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. எம்.எல்.ஏ.க்கள் மீதான அவதூறு வழக்குகள் தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி மீது 2011-14 ஆண்டு வரை தமிழக அரசால் பல அவதூறு வழக்குகள் தொடரப்பட்டது.

    கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் மரணமடைந்ததால் அந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என திமுக சார்பில் முறையிடப்பட்டு, அவரது இறப்பு சான்றிதழ்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை ஏற்றுக்கொண்ட சிறப்பு நீதிபதி கருணாநிதி மீதான அவதூறு வழக்குகளை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
    ×