செய்திகள்

உயிருடன் இருப்பவர்கள் புகைப்படத்தை பேனர், கட் அவுட்களில் பயன்படுத்த ஐகோர்ட் அனுமதி

Published On 2017-12-20 08:52 GMT   |   Update On 2017-12-20 08:52 GMT
உயிருடன் இருப்பவர்கள் புகைப்படத்தை பேனர், கட் அவுட்களில் பயன்படுத்த தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தலைமை நீதிபதி அமர்வு தடை விதித்துள்ளது.
சென்னை:

பொது இடங்களில் கட் அவுட், பேனர் வைக்க தடை கோரி தொடரப்பட்ட வழக்கில், உயிருடன் இருப்பவர்கள் புகைப்படத்தை பேனர், கட் அவுட்களில் பயன்படுத்த கூடாது என சென்னை ஐகோர்ட் தனி நீதிபதி வைத்தியநாதன் உத்தரவிட்டிருந்தார். இந்த தடை உத்தரவுக்கு எதிராக மாநகராட்சி சார்பில் வழக்கறிஞர் செல்வசேகரன் மேல் முறையீடு செய்தார். 

இந்த வழக்கை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், அவசர வழக்காக விசாரிக்க கோர்ட் மறுத்து விட்டது.

இந்நிலையில், இம்மனுவை இன்று விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்தனர். மேலும், ஆபாச படங்கள் மட்டுமே பேனர், கட் அவுட்களில் இருக்க கூடாது என்று விதிமுறைகள் உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
Tags:    

Similar News