செய்திகள்

நாமக்கல்லில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

Published On 2017-12-17 16:13 GMT   |   Update On 2017-12-17 16:13 GMT
ஒகி புயலில் கன்னியா குமரி மாவட்டத்தில் மீட்கபடாத மீனவர்களை மீட்க வலியுறுத்தி பா.ம.க. வினர் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்:

ஒகி புயலில் கன்னியா குமரி மாவட்டத்தில் மீட்கபடாத மீனவர்களை மீட்க வலியுறுத்தி பா.ம.க. வினர் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் பொன்.ரமேஷ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநில பொதுச் செயலாளர் பொன்னுசாமி முன்னிலை வகித்தார், 

ஆர்ப்பாட்டத்தில் கன்னியா குமரி மாவட்டத்தில் ஒகி புயலில் சிக்கி மீட்கப்படாமல் உள்ள மீனவர்களை மீட்க வலியுறுத்தியும், உயிரிழந்த மீனவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் இழப்பீடு தொகையை ரூ.50 லட்சமாக உயர்த்தி வழங்க வலியுறுத்தியும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். ஒகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க கோரி கோ‌ஷங்கள் இட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் துரைசாமி வரவேற்றார் . மாநில துணைத் தலைவர் வடிவேலன், மேற்கு மாவட்ட செயலாளர் சரவணராஜ், மனோகரன், பழனிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News