search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PMK demonstration"

    • ரூ.26 கோடி பாக்கி தொகையை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வலியுறுத்தல்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    போளூர்:

    போளூர் அடுத்த கரைப்பூண்டியில் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய ரூ.26 கோடியை வழங்க கோரி நேற்று ஆலை முன்பாக பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு பாமக வடக்கு மாவட்ட செயலாளர் வேலாயுதம் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் கோபி, கே.சி.குமரன், பாலமூர்த்தி, விஜயன் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.

    மாநிலக் கொள்கை பரப்புச் செயலாளர் மீ.கா செல்வகுமார் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஏழுமலை, கணேசன், பொதுக்குழு உறுப்பினர் கலைமணி மாவட்டத் தலைவர் ஏழுமலை உள்பட பலர் கலந்த கொண்டனர்..

    கரும்பு நிலுவை பாக்கி ரூபாய் 26 கோடியே வட்டியுடன் வழங்க கோரியும், ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய சம்பள பாக்கி உடனடியாக வழங்கக் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    முடிவில் ஒன்றிய செயலாளர் முருகன் நன்றி கூறினார்.

    • டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி நடந்தது
    • 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோஷம் எழுப்பினர்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் கூட நகரம் ஊராட்சி பார்வதிபுரம் அருகே உள்ள உள்ளி கூட்டு ரோடு அருகில் பல மாதங்களுக்கு முன்பு டாஸ்மாக் மதுபான கடை அமைக்கப்பட்டது.

    இந்த டாஸ்மாக் மதுபான கடை அமைக்கப்பட்டதால் பொதுமக்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் மற்றும் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளதாகவும் இந்த டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற கோரி கூட நகரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இருப்பினும் இப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அகற்றப்படவில்லை இதனையடுத்து வேலூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியில் சார்பில் டாஸ்மாக் கடை அகற்றக் கோரி கடைக்கு எதிரே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    அந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் என்.குமார் தலைமை தாங்கினார்.மாவட்ட தலைவர் வெங்கடேசன், மாவட்ட அமைப்பு செயலாளர் பாலாஜி, மாவட்ட அமைப்பு தலைவர் பாபு யாதவ், ஒன்றிய செயலாளர்கள் தினகரன், காந்திராஜா, காமராஜ் அரவிந்த், ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட நகரம் ஊராட்சி மன்ற தலைவர் பி.கே.குமரன் வரவேற்றார்.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர்கள் ரமேஷ், முகமதுபாஷா, மாவட்ட பொறுப்பாளர்கள் குணசீலன்அன்பரசன் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என கோஷங்கள் எழுப்பினார்கள்.

    குடியாத்தம் தாலுகா போலீச இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையில் 25க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    • பொதுமக்கள் பல கிலோமீட்டர் சுற்றி செல்வதாக புகார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் அடுத்த கூடநகரம் ெரயில்வேகேட் பகுதியில் ெரயில்வே மேம்பாலம் அமைக்க கடந்த 6ஆண்டுகளுக்கு முன்பு கூடநகரம் ெரயில்வே கேட் மூடப்பட்டது.

    இதனால் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மாணவர்கள், பொதுமக்கள், விவசாயிகள் என ஆயிரக்கணக்கானோர் பல கிலோமீட்டர் சுற்றிக்கொண்டு தங்கள் பகுதிக்கு செல்லும் அவல நிலை உள்ளது.

    குறிப்பாக கூடநகரம் கிராமத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், கூட்டுறவு வங்கி, மேல் ஆலத்தூர் கிராமத்தில் உள்ள வங்கி, மின்சார வாரிய அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பொது மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய இடங்களுக்கு செல்ல இந்த ெரயில்வே கேட் மூடப்பட்டதால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    மேலும் இந்த ெரயில்வே மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்தும் நிலம் கையகப்படுத்தப்பட்டு அதற்கான இழப்பீடு தொகை வழங்கப்பட்டும் ெரயில்வே மேம்பால பணியை செய்யாமல் காலம் தாழ்த்தி வரும் நெடுஞ்சாலை துறையை கண்டித்து மேலூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கூட நகரம் ெரயில்வே கேட் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் என்.குமார் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் வெங்கடேசன், மாவட்ட அமைப்புச் செயலாளர் பாலாஜி, ஒன்றிய செயலாளர் தினகரன், காமராஜ் அரவிந்த், ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட நகரம் ஊராட்சி மன்ற தலைவர் பி.கே.குமரன் வரவேற்றார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர்கள் ரமேஷ், குமார், முகமதுபாஷா மாவட்ட பொறுப்பாளர்கள் குணசீலன், அன்பரசன், திருமலை, கோபி, சதீஷ், ஞானவேல் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் உடனடியாக ெரயில்வே கேட்டை திறந்து விட வேண்டும், ரயில்வே மேம்பாலம் உடனடியாக கட்டுவதற்கான பணிகளை நெடுஞ்சாலை துறை தொடங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    • போதை பொருட்களை தடை செய்ய வலியுறுத்தல்
    • ஏரளாமானோர் கலந்து கொண்டனர்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை முத்துக்கடையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போதைப் பொருட்களை தடை செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் எம்.கே.முரளி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் அ.ம.கிருஷ்ணன், ஆறுமுகம், மாவட்ட பொருளாளர்கள் உமாமகேஸ்வரி, அமுதா சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்ட செயலாளர் க.சரவணன் வரவேற்றார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் கஞ்சா, குட்கா, ஆன்ஸ், பான்பராக் போன்ற போதை பொருட்களை தடை செய்ய கோரி வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் நல்லூர் சண்முகம், முன்னாள் மாநில துணை அமைப்பு செயலாளர் தங்கதுரை, ஒன்றிய செயலாளர் சபரிகிரிசன், பாரத், ரவி, தேவேந்திரன், நகர செயலாளர்கள் கஜேந்திரன், ஞானசேகர், பாமக நிர்வாகிகள் கிரிகுமரன், செல்வம், கண்ணதாசன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

    • போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க கோரி கோஷம்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பா.ம.க.வினர் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர். கிழக்கு மாவட்ட செயலாளர் இளவழகன் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட தலைவர் குமார் வரவேற்று பேசினார்.

    முன்னாள் அமைச்சர் என்.டி.சண்முகம் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர்கள் பொய்கை வெங்கடேசன், லத்தேரி வெங்கடேசன், இளைஞரணி செயலாளர் ஜெகன், துணைத் தலைவர் சம்பத், துணை செயலாளர்கள் இளங்கோவன், கோபி, துளசிராமன், மாநில மகளிர் அணி செயலாளர் வரலட்சுமி, மாவட்ட வன்னியர் சங்க துணை தலைவர் சுரேஷ்கோபி, சுரேஷ், சமூக நீதிப் பேரவை சந்துரு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    தமிழகத்தில் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க கோரி கோஷம் எழுப்பினர்.

    நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றாத வருவாய்த் துறையினரை கண்டித்து செங்கல்பட்டு பழை பஸ் நிலையம் அருகே பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அருகே உள்ள குமுழி ஊராட்சிக்குட்பட்ட மேட்டுப்பாளையம் கிராமத்தில் நீர்நிலைப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் உள்ளன.

    இதனை அகற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று வருவாய்த்துறையினருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.

    ஆனால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இதையடுத்து ஆக்கிரமிப்பை அகற்றாத வருவாய்த் துறையினரை கண்டித்து செங்கல்பட்டு பழை பஸ் நிலையம் அருகே பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாநில துணை பொதுச் செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். இதில் ராதாகிருஷ்ணன், மாவட்ட தலைவர் சீனிவாச ஐயங்கார், மாநில பொருளாளர் செல்வி கிருஷ்ண முர்த்தி, தொகுதி செயலாளர் அண்ணாமலை, செயற்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் கணபதி, ஒண்டிவீரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கரூர் மாவட்ட பா.ம.க. சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கரூர்:

    கரூர் மாவட்ட பா.ம.க. சார்பில் கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணை பொதுச்செயலாளர் பி.எம்.கே. பாஸ்கரன் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர் கண்ணன், மாவட்ட அமைப்பு செயலாளர் ராக்கி முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காவிரி, அமராவதி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடியபோதும் கடைமடை பகுதி வரை தண்ணீர் செல்லாததை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மேலும் மாவட்டத்தில் உள்ள பஞ்சப்பட்டி ஏரி, தாதம்பாளையம் ஏரி உள்ளிட்ட பெரிய ஏரிகளில் காவிரி-அமராவதி ஆற்று உபரிநீரை குழாய் மூலம் கொண்டு சென்று அதில் சேகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. 

    இதில் மாநில துணை தலைவர் குணசேகரன், நகர செயலாளர் சங்கர், மாவட்ட துணை செயலாளர் வரதராஜன், மாநில உழவர் பேரியக்க துணை தலைவர் ஞானசேகரன், தாந்தோன்றி மேற்கு ஒன்றிய செயலாளர் ரவி உள்பட பா.ம.க. நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    கிருஷ்ணகிரி அணை நீரை ஏரிகளுக்கு நிரப்ப வலியுறுத்தி பா.ம.க. சார்பில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஜி.கே.மணி கலந்து கொண்டார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரை வீணாக ஆற்றில் கலக்க செய்யாமல் அதை மக்களுக்கு பயன்படும் வகையில் ஏரிகளில் நிரப்ப வலியுறுத்தியும், கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வலியுறுத்தியும் பா.ம.க. சார்பில் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட பா.ம.க. செயலாளர் அர்ச்சுனன் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச் செயலாளர் சுப.குமார், மாநில துணை தலைவர் மேகநாதன், மாநில தேர்தல் பணிக்குழு தலைவர் பு.தா.அருள்மொழி, கிழக்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டு பேசியதாவது:-

    கிருஷ்ணகிரி அணையில் உடைந்த மதகை சரி செய்யாமல் இருப்பதை கண்டித்தும், அணையில் இருந்து வீணாக செல்லும் தண்ணீரை சேமிக்காததை கண்டித்தும், அணையின் நீரை 52 அடியாக உயர்த்தி உடனடியாக மதகு அமைக்க வலியுறுத்தியும் பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு (2017) நவம்பர் மாதம் கிருஷ்ணகிரி அணையில் பிரதான மதகு உடைந்து தண்ணீர் வீணாகி சென்றது.

    அணையின் நீர்மட்டம் 52 அடியாக இருந்ததை மதகு உடைந்ததின் காரணமாக 42 அடியாக்கி உள்ளார்கள். தற்போது நீர்வரத்து அதிகமாக உள்ள நிலையில் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது. தண்ணீரை வீணாக்க கூடாது. மற்ற மாநிலங்களை போல தமிழக அரசு அணைகளை கட்டவில்லை. கால்வாய்களை வெட்டவில்லை.

    இருக்க கூடிய அணையை பாதுகாத்து தண்ணீரை சேமிக்க வேண்டும். தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் பா.ம.க. சார்பில் மாவட்டம் முழுவதும் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். மாவட்டத்தில் முதல் கட்டமாக 28 ஏரிகளையும், அடுத்த கட்டமாக 25 ஏரிகளையும் நிரப்பிட வேண்டும். குறிப்பாக போச்சம்பள்ளி சுற்று வட்டாரத்தில் உள்ள ஏரிகளை நிரப்ப வேண்டும். எண்ணேகொல்புதூர் திட்டத்தை படேதலாவ் ஏரியுடன் இணைக்க வேண்டும்.

    ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரை கொடியாளம் அருகில் தடுத்து பக்கத்தில் உள்ள ஏரிகளில் நிரப்ப வேண்டும். அவ்வாறு நிரப்பினால் சூளகிரி சுற்று வட்டார பகுதி விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் வன்னியர் சங்க மாநில துணை தலைவர் கணேசன், பா.ம.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் மாதேஸ்வரன், இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் தமிழ்ச்செல்வி வரதராஜன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 
    ×