செய்திகள்

உசிலம்பட்டியில் 515 மது பாட்டில்கள் பறிமுதல்: 3 பேர் கைது

Published On 2017-12-12 11:33 GMT   |   Update On 2017-12-12 11:33 GMT
சட்ட விரோதமாக மது விற்ற 3 பேரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 515 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

உசிலம்பட்டி:

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை நடந்து வருகிறது. அங்குள்ள பஸ் நிலையம் மற்றும் பல பகுதிகளில் பெட்டிக்கடை, டீக்கடைகளில் மது பாட்டில்கள் சர்வ சாதாரணமாக விற்பனை செய்து வருகின்றனர்.

உசிலம்பட்டியில் சட்ட விரோதமான மது விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அதன்படி அவரது உத்தரவின் பேரில் மாவட்ட மது விலக்கு தடுப்புப்பிரிவு போலீசார் நேற்று இரவு ரோந்து சென்றனர்.

அப்போது உசிலம்பட்டி நந்தவனத்தெருவில் கடையில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த ராஜேஷ் (33), சந்தை நுழைவுவாயிலில் மது விற்ற பாண்டி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். வி. பெருமாள்பட்டியில் வீட்டில் மது விற்பனை செய்த தெய்வம் என்பவரும் கைது செய்யப்பட்டார். இவர்களிடம் இருந்து 515 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

Similar News