செய்திகள்

விஷால் மனு நிராகரிப்பு: தலைமை தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் -மு.க.ஸ்டாலின்

Published On 2017-12-07 07:08 GMT   |   Update On 2017-12-07 07:08 GMT
நடிகர் விஷாலின் வேட்பு மனு நிராகரித்தது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூர் தொகுதியில் நடந்து முடிந்த நலத்திட்ட பணிகள் மற்றும் நடைபெற்று வரும் நலத்திட்ட பணிகளை ஆய்வு செய்தார்.

மடுமா நகரில் மாணவ- மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார். பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர் திட்டமிட்டு விஷால் வேட்புமனுவை நிராகரித்தாரா? என்ற சந்தேகம் நிலவுகிறது.


டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையம் இது தொடர்பாக விசாரித்து என்ன நடந்திருக்கிறது என்பதை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுத்தால்தான் இந்த தேர்தல் நியாயமாக நடக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கும் ஏற்படும். மக்களுக்கும் ஏற்படும்.

அரசியல் சட்ட விதிகளின்படி பார்த்தால் கவர்னர் ஆய்வு நடத்துவதற்கும், மாவட்டம் வாரியாக சென்று மக்கள் பணிகளை கவனிப்பதற்கும் உரிமை இல்லை என்றுதான் சொல்லப்படுகிறது. ஆட்சியே இல்லை என்று கவர்னர் முடிவு செய்து அந்த பணியில் இறங்கி இருக்கிறாரா? என்ற சந்தேகம் வந்திருக்கிறது.

கவர்னர் ஆய்வு செய்வதை கைவிட்டு விட்டு அ.தி.மு.க.வை பெரும்பான்மை நிரூபிக்கச் செய்ய உத்தரவிட்டால் வரவேற்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News