செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்தது

Published On 2017-11-21 08:14 GMT   |   Update On 2017-11-21 08:14 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்து, ஒரு சவரன் 22,472-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

தங்கம் விலை சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த 12-ந்தேதி ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 560 ஆக இருந்தது. பின்னர் விலை குறைந்து 16-ந்தேதி பவுன் ரூ.22 ஆயிரத்து 472 ஆனது.

அதன்பிறகு விலை உயர்ந்தது. நேற்று பவுன் ரு.22 ஆயிரத்து 640-க்கு விற்றது. இன்று பவுனுக்கு ரூ.168 குறைந்தது. ஒரு பவுன் ரு.22 ஆயிரத்து 472 ஆக உள்ளது.

கிராமுக்கு ரூ.21 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.2,809-க்கு விற்கப்படுகிறது. பங்குசந்தையில் முதலீடு அதிகரிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை சரிந்துள்ளதாக கூறப்படுகிறது.

வெள்ளி கிராமுக்கு ரூ.500 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.42 ஆயிரத்து 600 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.42.60க்கு விற்கிறது.
Tags:    

Similar News