செய்திகள்

ஜெயலலிதா பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாகவே சோதனை நடைபெறுகிறது: தீபா பேட்டி

Published On 2017-11-17 20:30 GMT   |   Update On 2017-11-17 20:30 GMT
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாகவே வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர் என தீபா தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்து வந்த வேதா இல்லத்தில் வருமான வரித்துறையினர் நேற்று திடீரென சோதனை நடத்தினர். வருமான வரித்துறை கூடுதல் இயக்குனர் தலைமையில் 10-க்கு மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, போயஸ் கார்டன் இல்லத்தில் அதிமுக தொண்டர்கள் குவிந்தனர். போலீசாருக்கும் தொண்டர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், போயஸ் தோட்டத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்துவதை அறிந்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அங்கு வந்தார். ஆனால் அவரை உள்ளேவிட போலீசார் மறுத்து விட்டனர்.

இதுதொடர்பாக தீபா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஜெயலலிதவின் ரத்த வாரிசு நான் தான். எனக்கு முறைப்படி நோட்டீஸ் கொடுக்காமல் சோதனை நடத்துவது தவறு. சசிகலா குடும்பத்தை கைது செய்ய வேண்டும். அவர்களது ஒத்துழைப்புடன் தான் சோதனை நடைபெறுகிறது. ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.

காவல் துறையினர் என்னை போயஸ் தோட்ட இல்லத்துக்குள் செல்வதற்கு அனுமதிக்கவில்லை. வருமான வரித்துறையை எதிர்த்து வழக்கு தொடரவுள்ளேன்.

சொத்தில் எங்களுக்கு பங்கு இருக்கிறது. அதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளோம். ஜெயலலிதாவுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தவே சோதனை நடத்தப்படுகிறது. யாருடைய பெயரில் இந்த சோதனை நடைபெறுகிறது என தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News