செய்திகள்

ரூபாய் நோட்டில் இருந்து காந்தி படத்தை நீக்க கோரியவருக்கு அபராதம்

Published On 2017-11-13 08:03 GMT   |   Update On 2017-11-13 08:03 GMT
ரூபாய் நோட்டுகளில் இருந்து மகாத்மா காந்தி படம் நீக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோருக்கு ரூபாய் பத்தாயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது.
சென்னை:

ராமநாதபுரத்தை சேர்ந்த முருகானந்தம் ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

‘ரிசர்வ் வங்கி வெளியிடும் ரூபாய் நோட்டுக்களில், மகாத்மா காந்தியின் படம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த ரூபாய் நோட்டுகளில், பலர் பெயர், எண் உள்ளிட்டவைகளை கிறுக்கி வைக்கின்றனர். அதுவும் காந்தியின் படத்தின் மீதும் இதுபோல கிறுக்கி வைப்பதை சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர்.

சில சமூக விரோதிகள், கள்ள நோட்டும் அச்சடிக்கின்றனர். இந்த செயல்கள் எல்லாம், தேசத்தின் விடுதலைக்காக அரும்பாடுப்பட்ட, தேசப் பிதா என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தியை அவமதிக்கும் செயலாக உள்ளது. எனவே, ரூபாய் நோட்டில் உள்ள காந்தி படத்தை நீக்க மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கி கவர்னர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் விசாரித்து, மனுவை தள்ளுபடி செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும் இந்த வழக்கை தொடர்ந்த மனுதாரர் முருகானந்தத்துக்கு ரூ.10 ஆயிரம் வழக்கு செலவு (அபராதம்) விதிப்பதாகவும் உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News