search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூபாய் நோட்டு"

    • 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மட்டும் அந்த நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.
    • 2,000 ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து செல்லத்தக்கவை என குறிப்பிடப்பட்டுள்ளது.

    கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி, பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அப்போது, புதிதாக 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

    கடந்த மே 19-ந் தேதி, அந்த நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. அவற்றை செப்டம்பர் 30-ந் தேதிக்குள் வங்கியில் மாற்றிக்கொள்ளலாம் அல்லது வங்கி கணக்கில் செலுத்தலாம் என்று அறிவித்தது. பின்னர், இந்த கால அவகாசம், அக்டோபர் 7-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து, 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மட்டும் அந்த நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) இன்று 2000 ரூபாய் நோட்டுகளில் கிட்டத்தட்ட 97.69 சதவீதம் வங்கிக்கு திரும்பியுள்ளதாகவும் மற்றும் 8,202 கோடி ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் இன்னும் பொதுமக்களிடம் புழக்கத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என அறிவிக்கப்பட்ட மே 19, 2023 அன்று வணிகம் முடிவடையும்போது ரூ.3.56 லட்சம் கோடியாக புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு மார்ச் மாத வணிக முடிவில் ரூ.8,202 கோடியாகக் குறைந்துள்ளது என இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    மேலும், இதனால், மே 19, 2023 நிலவரப்படி புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளில் 97.69 சதவீதம் திரும்பி வந்துவிட்டன. இருப்பினும், 2,000 ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து செல்லத்தக்கவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • கருப்பு பணமாக முடக்கி வந்த காரணத்தினால் நடுத்தர மக்கள் பார்க்க கூட முடியவில்லை.
    • சிறுக...சிறுக... சேர்த்து வைத்த 2000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் செல்லாது என்று அறிவித்து உள்ளது அதிர்ச்சியாக இருக்கிறது.

    சிறு வியாபாரி புவனேஸ்வரி (கோடம்பாக்கம்):- நடுத்தர மக்களுக்கு மற்றும் ஏழைகளுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. பணக்காரர்களிடம் மட்டுமே ரூ.2000 நோட்டு அதிகளவில் உள்ளது. அவர்கள் தான் அதிகம் பயப்பட வேண்டும்.

    இளநீர் வியாபாரி குமார் (கில் நகர்):- 2000 ரூபாய் நோட்டுகளை பார்த்தே 2 வருடங்கள் ஆகிறது. நோட்டுகள் அச்சடித்தது முதல் 2, 3 வருடங்கள் மட்டுமே புழக்கத்தில் இருந்தது. பிறகு அதை கருப்பு பணமாக முடக்கி வந்த காரணத்தினால் நடுத்தர மக்கள் பார்க்க கூட முடியவில்லை.

    ஆட்டோ டிரைவர் கணேஷ் (சூளைமேடு):- உள்ளூர், வெளியூர் பயணிகள் யாரும் அதிகளவில் 2000 ரூபாய் நோட்டுகள் தருவதில்லை. ஆனால் இனி அடிக்கடி மீண்டும் 2000 ரூபாய் பணப் புழக்கத்தை பார்க்கலாம்.

    கூலி தொழிலாளி ஜெகநாதன் (போரூர்):- வார சம்பளத்தில் ஒன்று, இரண்டு 2000 ரூபாய் தாள்கள் வரும் நிலையில் அதனை சில்லரையாக மாற்ற பெரும்பாடு பட வேண்டி உள்ளது. இந்த நிலையில் டாஸ்மாக்கில் கூட சில்லரை தர மாட்டார்கள். இனி எங்கும் மாற்ற முடியாது. இனி அதனை கண்டால் பயம்தான் வரும்.

    குடும்ப பெண் சித்ரா (போரூர்):- கொஞ்சம் கூட பணத்தை சேர்த்து வைக்க முடியல. வீட்டிற்கு கணவர் செலவுக்கு தரும் பணத்தில் மிச்சப்படுத்தி அதனை 500, 1000 ரூபாய்களாக மாற்றி வைத்து இருந்த நிலையில் திடீரென 500, 1000 ரூபாய் செல்லாது என அறிவிப்பு விடுத்து படாதபாடு பட்ட நிலைமையில் மீண்டும் சிறுக...சிறுக... சேர்த்து வைத்த 2000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் செல்லாது என்று அறிவித்து உள்ளது அதிர்ச்சியாக இருக்கிறது.

    • சாமானிய மக்களை மட்டுமன்றி சிறு, குறு, நடுத்தரவர்க்க வணிகர்களை பெருமளவு பாதிப்புக்கு உள்ளாக்கும் என்பதை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
    • சில்லரை வணிகர்களே 20,000 ரூபாய்க்கு மேல், வங்கிக்கு செலுத்த செல்லுகின்றபோது அதனை வங்கிகள் ஏற்குமா? என்ற கேள்விக்குறியும் எழுப்பப்படுகிறது.

    சென்னை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கடந்த 2016-ம் ஆண்டு பழைய 1000, 500 ரூபாய் நோட்டுகளுக்கு பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டவுடன், புதிய 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது.

    அந்த சமயத்தில் பொது மக்களுக்கும், வணிகர்களுக்கும் மிகப்பெரும் இடையூறுகளையும், துயரங்களையும், இழப்புகளையும் ஏற்படுத்தியது என்பது அனைவரும் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறார்கள்.

    7 ஆண்டுகளுக்கு முன் புழக்கத்தில் விடப்பட்ட இந்த 2000 ரூபாய் நோட்டுகள், புழக்கத்தில் இருந்து நீக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி நேற்றைய தினம் திடீரென அறிவித்திருக்கின்றது.

    இது சாமானிய மக்களை மட்டுமன்றி சிறு, குறு, நடுத்தரவர்க்க வணிகர்களை பெருமளவு பாதிப்புக்கு உள்ளாக்கும் என்பதை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்த உடனேயே, சேமிப்பாக வைத்திருக்கக்கூடிய எளிமையான மக்களிடம் இருந்து, வணிகர்களிடமே அன்றாட தேவைக்காக புழக்கத்திற்கு கொண்டு வரப்படும்.

    இந்நிலையில் வணிகர்கள் அந்த நோட்டுக்களை வாங்க மறுக்கும் நிலை ஏற்படும். அதுபோன்ற நிலை ஏற்படும்போது பொது மக்களுக்கும்-வணிகர்களுக்கும் சர்ச்சைகள் ஏற்படும் நிலை உருவாகும். மேலும், சில்லரை வணிகர்களே 20,000 ரூபாய்க்கு மேல், வங்கிக்கு செலுத்த செல்லுகின்றபோது அதனை வங்கிகள் ஏற்குமா? என்ற கேள்விக்குறியும் எழுப்பப்படுகிறது.

    இவற்றிற்கெல்லாம் விடைகாணும் விதமாக, பொதுமக்களின் அன்றாட புழக்கத்திற்கும், வணிகர்களின் வங்கி பயன்பாட்டிற்கும், 2000 ரூபாய் நோட்டுக்களின் நிலையை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தெளிவுபடுத்திட வேண்டும்.

    ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தங்களிடம் வைத்துள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை வணிக புழக்கத்திற்கு கொண்டு வந்து, அதனை மாற்றிக் கொள்வதற்கான எளிய நடைமுறைகளை, உரிய கால அவகாசத்துடன் தற்போது அறிவித்துள்ள 2023 செப்டம்பர் 30 என்பதை-டிசம்பர் 31 வரை கால நீட்டிப்பு அளித்தும், வணிகர்களும்-பொதுமக்களும் வங்கிகளில் 60,000 ரூபாய் வரை மாற்றிக்கொள்ள அனுமதி அளித்து பொதுமக்களும் வணிகர்களும் பதற்றமின்றி 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளும் நிலையை உருவாக்கி மத்திய அரசுக்கு எந்தவித அவப் பெயரும் ஏற்படாதவண்ணம் விதிகளை உடனடியாக அறிவித்திடுமாறு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுமக்கள், உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், வணிகர்கள் நலன் கருதி வேண்டுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதலில் ரூ.2000 நோட்டு கொண்டு வருவதன் மூலம் ஊழல் ஒழியும் என்றார். இப்போது ரூ.2000 நோட்டுகளை தடை செய்வதன் மூலம் ஊழல் ஒழிந்துவிடும் என்று சொல்கிறார்.
    • படிக்காத பிரதமரிடம் யார் வேண்டுமானாலும், என்ன வேண்டு மானாலும் சொல்லலாம்.

    புதுடெல்லி:

    ரூ.2000 நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்தது. இதற்கு தான் பிரதமர் படித்திருக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    முதலில் ரூ.2000 நோட்டு கொண்டு வருவதன் மூலம் ஊழல் ஒழியும் என்றார். இப்போது ரூ.2000 நோட்டுகளை தடை செய்வதன் மூலம் ஊழல் ஒழிந்துவிடும் என்று சொல்கிறார்.

    அதனால் தான் நாங்கள் சொல்கிறோம், பிரதமர் படித்தவராக இருக்க வேண்டும். படிக்காத பிரதமரிடம் யார் வேண்டுமானாலும், என்ன வேண்டு மானாலும் சொல்லலாம். அவருக்கு எதுவும் புரியாது. பொதுமக்கள் தான் கஷ்டப்பட வேண்டும்.

    இவ்வாறு கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    • அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்கிற அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட வேண்டும்.
    • பொதுமக்கள் வங்கியில் சென்று தங்களிடம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளுமாறு கூறி வருகிறோம்.

    செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரையில் அவகாசம் அளிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுதொடர்பாக தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறியதாவது:-

    2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் மாதம் 30-ந்தேதி வரை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என்கிற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் 8 நாட்களும், அடுத்து வரும் 4 மாதங்களிலும் மட்டுமே கால அவகாசம் என்பது கண்டிப்பாக போதுமானதாக இருக்காது.

    பொதுமக்களிடம் இருந்து வியாபாரிகள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்து வந்தாலும் வணிக ரீதியாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வியாபாரிகளிடம் அதிக அளவில் சேருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.

    எனவே செப்டம்பர் 30-ந்தேதி வரை மட்டுமே வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தை நீட்டித்து வழங்க வேண்டும். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்கிற அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட வேண்டும்.

    500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நேரத்தில் பொதுமக்களிடம் இருந்து வாங்கிய பணத்துக்கு வருமான வரித்துறையினரிடம் விளக்கம் அளிக்க வேண்டிய நிலையும் வியாபாரிகள் பலருக்கு ஏற்பட்டது. இதனால் கடுமையான பாதிப்புகளையும் வியாபாரிகள் சந்திக்க நேரிட்டது.

    இதன்காரணமாகவே பொதுமக்கள் வங்கியில் சென்று தங்களிடம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளுமாறு கூறி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2,000 ரூபாய் நோட்டுகள் ரத்து செய்யப்பட்டால் ஊழலுக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும்.வாக்காளர்களுக்கு பணம் வினியோகித்து தேர்தலில் வெற்றி பெற அரசியல்வாதிகள் முயற்சித்து வருகின்றனர்.
    • அனைத்துப் பொருட்களின் விலைகளும், கியாஸ் எரிபொருள் மற்றும் ஏனைய பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது.

    திருப்பதி:

    2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் இந்திய ரிசர்வ் வங்கியின் முடிவை ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு வரவேற்றுள்ளார்.

    இது குறித்து சந்திரபாபு நாயுடு தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ஊழல், பதுக்கல் மற்றும் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதற்கு மூல காரணமான அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை ரத்து செய்ய வேண்டும் என்று நான் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறேன்.

    இது பொருளாதாரத்தை உயர்த்துவது மட்டுமல்லாமல், மக்களின் பெரிய நன்மைக்காக நேர்மையுடன் உழைக்கும் நேர்மையான நபர்களின் முயற்சிகளுக்கு மிகப்பெரிய மதிப்பையும் சேர்க்கும்.

    இந்த நடவடிக்கை வாக்காளர்களிடையே பணப் பட்டுவாடாவை பெரிய அளவில் தடுக்க உதவும்.

    2,000 ரூபாய் நோட்டுகளை தடை செய்யும் முடிவு நிச்சயமாக நல்ல அறிகுறி. நான் நீண்ட காலத்திற்கு முன்பே டிஜிட்டல் கரன்சி குறித்த அறிக்கையை சமர்ப்பித்திருந்தேன்,

    2,000 ரூபாய் நோட்டுகள் ரத்து செய்யப்பட்டால் ஊழலுக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும்.வாக்காளர்களுக்கு பணம் வினியோகித்து தேர்தலில் வெற்றி பெற அரசியல்வாதிகள் முயற்சித்து வருகின்றனர். இதில் ரூ.2000 நோட்டுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு பணப் பைத்தியம் அவர் மாநிலம் முழுவதையும் கொள்ளையடிக்கத் துடிக்கிறார். பணத்திற்காக யாரையும் கொல்ல அவர் தயாராக இருக்கிறார்.

    அனைத்துப் பொருட்களின் விலைகளும், கியாஸ் எரிபொருள் மற்றும் ஏனைய பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது.

    இதற்கு எதிராக யாராவது குரல் எழுப்பினால், அத்தகைய நபர்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வீர சாவர்க்கரின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
    • ரூபாய் நோட்டுகளில் வீர சாவர்க்கர் உருவம் பொறிக்க வேண்டும் என இந்து மகாசபா கோரிக்கை விடுத்தது.

    லக்னோ:

    சுதந்திரப் போராட்ட வீரரும், இந்து மகாசபா முன்னாள் தலைவருமான வீர சாவர்க்கரின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

    உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள இந்து மகாசபா அலுவலகத்தில் நினைவுநாள் நிகழ்ச்சி நடந்தது. நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்றனர். அதைத்தொடர்ந்து, மத்திய அரசுக்கு இந்து மகாசபா சார்பில் ஒரு கடிதம் எழுதப்பட்டது. அந்தக் கடிதத்தில் கூறியதாவது:

    ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்திக்கு பதிலாக வீர சாவர்க்கர் மற்றும் இதர சுதந்திரப் போராட்ட வீரர்களின் உருவங்களைப் பொறிக்க வேண்டும். மேலும், பாராளுமன்ற கட்டிடத்துக்குச் செல்லும் சாலைக்கு வீர சாவர்க்கர் பெயரை சூட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    • வங்கிகளின் ஏ.டி.எம்., மையங்களில் சில நேரங்களில், பணம் எடுக்க முடியாமல் நெட் ஒர்க் பிரச்சினை ஏற்படுகிறது
    • ஏ.டி.எம்., எந்திரங்களில், பெரும்பாலும் 500 ரூபாய் நோட்டுகள் தான் வருகிறது.

    அவினாசி :

    தன்னார்வ நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளுடன், திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், காலாண்டு கூட்டம் நடத்தினார்.

    இதில் கன்ஸ்யூமர்ஸ் கேர் அசோசியேசன் சார்பில் அதன் தலைவர் காதர்பாட்சா, பொது செயலர் ராமலிங்கம், நியமன செயலர் கிறிஸ்டோபர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கை வருமாறு:-சில வங்கிகளின் ஏ.டி.எம்., மையங்களில் சில நேரங்களில், பணம் எடுக்க முடியாமல் நெட் ஒர்க் பிரச்சினை ஏற்படுகிறது. இதனால் பென்ஷனர்கள், மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். ஏ.டி.எம்., எந்திரங்களில், பெரும்பாலும் 500 ரூபாய் நோட்டுகள் தான் வருகிறது.

    சில்லரை செலவினங்களுக்கு தேவையான10, 20, 50, 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் கிடைப்பதில்லை. இதுவும் பல வகைகளில் பிரச்சினையாகவே உள்ளது.எனவே அருகேயுள்ள வங்கி கிளைகளில் 500 ரூபாய் நோட்டுகளுக்கு சில்லரை நோட்டு தரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது, ஏ.டி.எம்., மையங்களில் சில்லரை ரூபாய் நோட்டுகள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.கூட்டத்தில் நுகர்வோர் சார்ந்த செயல்பாடுகளில் சிறப்புற செயல்பட்டமைக்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்ட பாராட்டுச்சான்று, விருது, கேடயம் ஆகியவற்றை சங்க தலைவர் காதர்பாட்சா பெற்று கொண்டார்.

    ரூபாய் நோட்டு தட்டுப்பாடு, வங்கிக்கடன் மோசடி, கடன் கொள்கை ஆகியவை தொடர்பாக ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேலிடம் நிதித்துறைக்கான பாராளுமன்ற நிலைக்குழு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. #UrjitPatel
    புதுடெல்லி:

    ரிசர்வ் வங்கி கவர்னராக உள்ள உர்ஜித் பட்டேல் நிதித்துறைக்கான பாராளுமன்ற நிலைக்குழு முன்னிலையில் இன்று ஆஜரானார். காங்கிரஸ் எம்.பி வீரப்ப மொய்லி தலைமையிலான இந்த நிலைக்குழுவில் உறுப்பினராக உள்ள பல்வேறு கட்சி எம்.பி.க்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்று வெளிநாட்டுக்கு ஓடிய தொழிலதிபர்கள் குறித்து உர்ஜித் பட்டேலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. மேலும், சமீபத்தில் ஏற்பட்ட ரூபாய் நோட்டு தட்டுப்பாடு, வங்கியில் கடன் பெறுவதற்கான விதிமுறைகளில் உள்ள கோளாறுகள், பணமதிப்பிழப்புக்கு பின்னர் வங்கிகளுக்கு வந்த ரூபாய் குறித்தும் கேள்வி எழுப்பட்டது.

    இதற்கு பதிலளித்து பேசிய உர்ஜித் பட்டேல், வங்கி அமைப்பை மேலும் வலிமையானதாக மாற்றுவதற்கான பணிகள் நடந்து வருவதாக கூறியுள்ளார். சமீபத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

    கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி தினேஷ் திரிவேதி, “பணமதிப்பிழப்புக்கு பின்னர் வங்கிகளுக்கு திரும்பி வந்த நோட்டுகள் குறித்து ரிசர்வ் வங்கி எந்த தகவல்களும் வெளியிடவில்லை. நிச்சயமாக அது நிலைக்குழுவிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். நாளை கவர்னர் அதனை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கிறோம்” என கூறினார்.

    நாளையும் நிலைக்குழு முன்னிலையில் உர்ஜித் பட்டேல் ஆஜராகி விளக்கமளிக்க உள்ளார். 
    குஜராத் பாடகர் பிரிஜ்ராஜ் காந்திவ் மீது ரசிகர்கள் லட்சத்திற்கும் அதிகமான பணத்தை மேலே வீசிய வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள கோவிலில் நேற்று பாட்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் பாடகர் பிரிஜ்ராஜ் காந்தி பாட்டு பாடி கொண்டிருந்தார். அப்போது நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்த சிலர் அவர் மீது பணத்தை வீசினர். மேடை முழுவதும் ரூபாய் நோட்டுகளாக குவிந்தது.

    இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை கண்ட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த குற்ற சாட்டிற்கு பதில் அளித்த பிரிஜ்ராஜ், இந்த மாதம் நான் இலவசமாக நிகழ்ச்சி நடத்தி கொடுப்பேன். நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் பணம் நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்தப்படும். மேலும், நன்கொடையாகா வழங்கப்படும் என கூறினார்.

    இச்சம்பவம் குறித்து பேசிய பா.ஜ.க. தலைவர் ஜித்து பாய், மக்கள் தங்கள் அன்பை இது போன்ற செயல்கள் மூலம் வெளிப்படுத்துகின்றனர். இது தவறான நோக்கத்தில் செய்யப்பட்டது அல்ல என கூறினார்.

    ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி புகைப்படத்தை அகற்றிவிட்டு பதிலாக சவார்கர் படத்தை இடம்பெறச்செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு அகில பாரத இந்து மஹாசபை கோரிக்கை விடுத்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்துத்துவ இயக்கங்களின் முன்னோடியாக கருதப்படும் விநாயக் தாமோதர் சவாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என சில அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவரது பிறந்தநாள் நேற்று இந்த அமைப்பினரால் விமர்சையாக கொண்டாடப்பட்ட நிலையில், ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி புகைப்படத்தை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக சவார்கர் படத்தை இடம்பெறச்செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு அகில பாரத இந்து மஹாசபை கோரிக்கை விடுத்துள்ளது.

    காந்தி மற்றும் சவார்கர்

    ×