செய்திகள்

மர்ம காய்ச்சலுக்கு பெண் பலி: ஆஸ்பத்திரியை உறவினர்கள் முற்றுகை

Published On 2017-10-23 12:55 GMT   |   Update On 2017-10-23 12:55 GMT
மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்த பெண் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். ஆஸ்பத்திரியை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கருப்பூர்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அன்புநகர் பகுதியை சேர்ந்தவர் வீரமணி. இவருடைய மனைவி விஜயா(வயது 43). இவர் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக விஜயா சேலம் அருகே உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு விஜயா பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அவருடைய உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள், டாக்டர்கள் சரியாக சிகிச்சை அளிக்காததே விஜயா இறப்பிற்கு காரணம் என்று குற்றம் சாட்டினர். இதில் ஆத்திரமடைந்த உறவினர்களில் ஒருவர் ஆஸ்பத்திரி கண்ணாடியை கையால் அடித்து உடைத்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் கிடைத் ததும் சூரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் போலீசார் இறந்த விஜயாவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்தனர்.
Tags:    

Similar News