செய்திகள்

தீபாவளி சிறப்பு ரெயில்கள் மூலம் ரூ.1 கோடி வருமானம்

Published On 2017-10-21 07:42 GMT   |   Update On 2017-10-21 07:42 GMT
தீபாவளி பண்டிகையையொட்டி 24 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டது. இச்சிறப்பு ரெயில்கள் மூலம் தெற்கு ரெயில்வேவுக்கு ரூ.1 கோடியே 9 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.
சென்னை:

தீபாவளி பண்டிகையையொட்டி 24 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன.

வழக்கமான ரெயில்கள் அனைத்தும் 3 மாதங்களுக்கு முன்பே நிரம்பி விட்டதால் சில ரெயில்கள் கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்பட்டன.

தீபாவளி சிறப்பு ரெயில்கள் மூலம் தெற்கு ரெயில்வேவுக்கு ரூ.1 கோடியே 9 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு 24 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. இதனால் தெற்கு ரெயில்வேக்கு சுமார் ரூ.1 கோடியே 4 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

இதே போல அடுத்தடுத்து வர உள்ள கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகைகளுக்கு வழக்கமாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் முன்பதிவு முடிந்துள்ளது.

எனவே தேவையான அளவுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News