செய்திகள்

மதுரை மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் பலி

Published On 2017-10-11 12:16 GMT   |   Update On 2017-10-11 12:16 GMT
மதுரை மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் 3 பேர் பலியானார்கள். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:

பெருங்குடி அருகே வலையங்குளம் மக்காரம் பாறையை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 75).

இவர் நேற்று அதிகாலை வலையங்குளம் காலனி பஸ் நிறுத்தத்தில் நின்றார். அப்போது வேகமாக வந்த வேன் மோதியது.

இதில் படுகாயம் அடைந்த முனியாண்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்து பெருங்குடி போலீசில் முனியாண்டி மகன் பாண்டி கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ரகுபதி ராஜா வழக்குப்பதிவுசெய்து, வேன் டிரைவர் வீரமணிகண்டன் (33) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலூர் குன்னக்குடி பட்டியை சேர்ந்தவர் மணி (வயது 65).

இவர் நேற்று இரவு திருச்சி-மதுரை நான்குவழி சாலையில், குன்னக்குடி சந்திப்பில் ரோட்டை கடக்க முயன்றார்.

அப்போது வேகமாக வந்த வேன் மோதியது. இதில் படுகாயம் அடைந்த மணி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீசில் மணி மகன் அழகு பாண்டி கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் மாரிச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

சிந்துப்பட்டி அருகே ஏ.கன்னியம்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் காமாட்சி (54).

இவர் நேற்று மாலை உசிலம்பட்டி-திருமங்கலம் சாலையில், கன்னியம்பட்டி சந்திப்பில் ரோட்டை கடக்க முயன்றார்.

அப்போது வேகமாக வந்த பைக் மோதியது. இதில் படுகாயம் அடைந்த காமாட்சி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்து சிந்துப் பட்டி போலீசில் காமாட்சி மனைவி வீரம்மாள் கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் அன்னமயில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News