செய்திகள்

சேகர்ரெட்டி வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.ஐ. போலீசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2017-10-09 08:18 GMT   |   Update On 2017-10-09 08:18 GMT
தொழிலதிபர் சேகர்ரெட்டி உள்ளிட்டோர் மீதான வழக்கின் தற்போதைய நிலை குறித்து சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சி.பி.ஐ. போலீசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

சென்னை தி.நகரை சேர்ந்த தொழிலதிபர் சேகர் ரெட்டி. ரிசர்வ் வங்கி அண்மையில் வெளியிட்ட புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுக்களை கோடிக்கணக்கில் பதுக்கி வைத்திருந்ததாக தொழில் அதிபர் சேகர்ரெட்டி, அவரது கூட்டாளிகள் சீனிவாசலு, பிரேம்குமார், திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன், கொல்கத்தா தொழில் அதிபர் பரஸ்மால் லோதா ஆகியோரை சி.பி.ஐ. போலீசார் கடந்த ஆண்டு கைது செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டில் சேகர் ரெட்டி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, தொழிலதிபர் சேகர்ரெட்டி உள்ளிட்டோர் மீதான வழக்கின் தற்போதைய நிலை குறித்து சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். விசாரணையை நவம்பர் 6-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags:    

Similar News