search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அறிக்கை தாக்கல்"

    • அரசமைப்புச் சட்ட திருத்தங்களுக்கு மாநிலப் பேரவைகளில் ஒப்புதல் பெறுவது அவசியமா? என்பதை ஆராய்ந்து பரிந்துரைத்தல்.
    • ஒரே நேர தேர்தல்களின் நிலையான சுழற்சியை பாதுகாக்கும் அம்சங்களைப் பரிந்துரைத்தல்.

    'ஒரே நாடு ஒரே தேர்தல்' நடைமுறைக்கான சாத்தியக் கூறு குறித்து ராம்நாத் தலைமையிலான குழு ஆய்வு செய்யும் என்று மத்திய அரசு கடந்த 1-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அறிவித்திருந்த நிலையில், குழு உறுப்பினர்கள் மற்றும் அதன் பணிகள் தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகம் நேற்று அறிக்கை வெளியிட்டது.

    முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், குழுவின் தலைவராக செயல்படுவார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் அதீர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் குலாம்நபி ஆசாத், முன்னாள் தலைமைச் செயலாளர் சுபாஷ் சி காஷ்யப், மூத்த வக்கீல் ஹரீஷ் சால்வே, முன்னாள் தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் உறுப்பினர்களாக செயல்பட உள்ளனர்.

    இக்குழு கூட்டங்களில் சிறப்பு அழைப்பாளராக மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் பங்கேற்பார். குழுவின் செயலராக சட்ட விவகாரங்கள் துறை செயலாளர் நிதின் சந்திரா பணியாற்ற உள்ளார்.

    ராம்நாத் தலைமையிலான உயர்நிலைக்குழு மேற்கொள்ள இருக்கும் பணிகளின் விவரங்களும் அறிக்கையில் இடம்பெற்று உள்ளன.

    மக்களவை, மாநிலப் பேரவைகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்காக, அரசமைப்புச் சட்டத்தின் தற்போதைய கட்டமைப்பை கருத்தில் கொண்டு, அதில் மேற் கொள்ள வேண்டிய திருத்தங்கள், மக்கள் பிரதி நிதித்துவச் சட்டம், இதர சட்டங்கள் மற்றும் விதிகளில் செய்ய வேண்டிய திருத்தங்களை ஆய்வு செய்து பரிந்துரைத்தல்.

    இத்தகைய அரசமைப்புச் சட்ட திருத்தங்களுக்கு மாநிலப் பேரவைகளில் ஒப்புதல் பெறுவது அவசியமா? என்பதை ஆராய்ந்து பரிந்துரைத்தல். தொங்கு பேரவை, நம்பிகையில்லாத் தீர்மானம் நிறைவேற்றம் போன்ற தருணங்களுக்கான தீர்வுகளை ஆய்வு செய்து பரிந்துரைத்தல்.

    ஒரே நேர தேர்தல்களுக்கான கட்டங்கள், கால வரம்பு தொடர்பான செயல்முறையைப் பரிந்துரைத்தல், ஒரே நேர தேர்தல்களின் நிலையான சுழற்சியை பாதுகாக்கும் அம்சங்களைப் பரிந்துரைத்தல்.

    தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வாக்கு ஒப்புகைச் சீட்டு கருவி போன்ற சாதனங்கள், மனிதவளம் குறித்து ஆராய்தல். ஒரே நேர தேர்தல்களுக்கான பொதுவான வாக்காளர் பட்டியல் பயன்பாடு குறித்து வழி முறைகளை ஆராய்தல்.

    ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்நிலைக் குழு உடனடியாக செயல்பாட்டை தொடங்குவதோடு, அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டறியும்.

    கூடிய விரைவில் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளிக்கும். இக்குழுவின் தலைமை அலுவலகம் புது டெல்லியில் செயல்படும் என்று மத்திய அரசின் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    • தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் கிராமத்தில் உள்ள 5 பேரை பிணை கைதிகளாக கடத்தி சென்றனர்.
    • சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வில் இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது.

    புதுடெல்லி:

    வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள். இதற்கு குகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

    இந்த பிரச்சினையில் இரு சமூகத்தினர் இடையே மோதல் நீடித்து வருகிறது. இரு சமூகங்கள் சார்ந்த தீவிரவாத குழுக்களும் தாக்குதல் நடத்துவதால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. 50 நாட்களுக்கு மேலாக மணிப்பூரில் வன்முறை நீடித்து வருகிறது.

    20 ஆயிரம் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டு இருந்தும் அங்கு அமைதி திரும்பவில்லை. மணிப்பூர் வன்முறையில் இதுவரை 120-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். பொது சொத்துக்களுக்கும், தனியார் சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் மாண்டபி கிராமத்தில் ஒரு கும்பல் நேற்று இரவில் துப்பாக்கி சூடு நடத்தியது. கிராமத்தின் பாதுகாப்பு பணியில் இருந்த தன்னார்வலர்கள் எதிர் தாக்குதல் நடத்தினர்.

    பல மணிநேரம் நடந்த இந்த துப்பாக்கி சண்டையில் தன்னார்வலர்கள் 3 பேர் குண்டு பாய்ந்து பலியானார்கள். 5 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 2 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. ஒருவரது தலை துண்டிக்கப்பட்டது.

    மேலும் தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் கிராமத்தில் உள்ள 5 பேரை பிணை கைதிகளாக கடத்தி சென்றனர். பல வீடுகளுக்கு தீ வைப்பு சம்பவமும் நிகழ்ந்தது.

    இந்நிலையில் மணிப்பூர் வன்முறை தொடர்பாக ஒரு வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு இன்று உத்தரவிட்டது.

    மணிப்பூர் வன்முறை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஏராளமான மனுக்கள் செய்யப்பட்டு உள்ளன. ராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும், ஒரு குறிப்பிட்ட பழங்குடியினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.

    சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வில் இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது.

    மணிப்பூர் மாநிலம் நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக சீரடைந்து வருவதாகவும், ஊரடங்கு நேரம் குறைக்கப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 153 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு பொது மக்கள் பாதுகாக்கப்படுவதாகவும் மத்திய அரசு வக்கீல் தெரிவித்தார்.

    இதையடுத்து மணிப்பூர் நிலைமை குறித்த அனைத்து தகவல்களும் அடங்கிய புதிய அறிக்கையை ஒரு வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அறிக்கை அடிப்படையில்தான் வழக்கை விசாரிக்க முடியும் என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.

    இந்த வழக்கு விசாரணை 10-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

    ×