செய்திகள்

சசிகலா கட்சி பொறுப்புக்கு வரவேண்டும் என்று ஜெயலலிதா ஒருபோதும் நினைத்தது இல்லை: தீபக்

Published On 2017-09-26 02:44 GMT   |   Update On 2017-09-26 02:44 GMT
தனக்கு பிறகு சசிகலா கட்சி பொறுப்புக்கு வரவேண்டும் என்று ஜெயலலிதா ஒருபோதும் நினைத்தது இல்லை என்று தீபக் கூறினார்.
சென்னை:

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது சாவில் மர்மம் இல்லை. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த எந்த அறிக்கையிலும் நான் கையெழுத்திடவில்லை. இன்றைக்கு அமைச்சர்கள் தங்களை ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கவில்லை என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் எங்களிடம் இதுகுறித்து அப்போது கேட்கவில்லை. அதேபோல் டி.டி.வி. தினகரன் ஒருமுறைகூட மருத்துவமனையில் ஜெயலலிதாவை சந்திக்க வரவில்லை.

கவர்னர் வித்யாசாகர் ராவ் வந்தபோதும், அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி வந்தபோதும் ஜெயலலிதாவுக்கு சுய நினைவு இல்லை. படிப்படியாக அவர் குணம் அடைந்தபோது டாக்டர் பீலேவுக்கு தனது கட்டை விரலை உயர்த்தி காட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.



தனக்கு பிறகு சசிகலா கட்சி பொறுப்புக்கு வரவேண்டும் என்று ஜெயலலிதா ஒருபோதும் நினைத்தது இல்லை. அவர் வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக்க நான் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டேன். ஆனால் அதற்கு தகுந்த இழப்பீட்டை வழங்க வேண்டும்.

இரட்டை இலை சின்னம் இருக்கும் வரை ரஜினி-கமல் அரசியல் பிரவேசம் பற்றி அ.தி.மு.க.வுக்கு கவலை இல்லை.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News