செய்திகள்

எடையை குறைக்க சிகிச்சை பெற்ற பெண் இறந்த விவகாரம்: 4 டாக்டர்கள் கொண்ட நிபுணர்கள் குழு அமைப்பு

Published On 2017-09-25 03:16 GMT   |   Update On 2017-09-25 03:16 GMT
எடையை குறைக்க சிகிச்சை பெற்ற பெண் இறந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்வதற்கு 4 டாக்டர்கள் கொண்ட நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை:

திருவண்ணாமலை மாவட்டம் சம்பூர்வராயன்நகரை சேர்ந்த 155 கிலோ எடை இருந்த வளர்மதி (வயது 46) என்ற பெண் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்தபோது உயிரிழந்தார். வளர்மதி தவறான சிகிச்சையால் உயிர் இழந்தாரா? என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக 2 பேர் குழுவினை தமிழக அரசு அமைத்தது.

இந்த குழுவினர் மருத்துவ அறிக்கைகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் டாக்டர்களின் கவனக்குறைவால் வளர்மதி இறக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் நிபுணர் குழுவை நேற்று அமைத்துள்ளது.

அந்த குழுவில், சென்னை மருத்துவ கல்லூரி மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரிகளில் இருந்து இரப்பை குடல் அறுவை சிகிச்சை நிபுணர், ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை நிபுணர், மயக்கவியல் துறை நிபுணர் மற்றும் எடை குறைப்பு அறுவை சிகிச்சை நிபுணர் என 4 டாக்டர்கள் இடம் பெற்றுள்ளனர்.

Tags:    

Similar News