செய்திகள்

இரட்டை இருப்பிட சான்றிதழ் விவகாரம்: தமிழக சுகாதார துறையின் அரசாணைக்கு இடைக்கால தடை

Published On 2017-09-22 09:14 GMT   |   Update On 2017-09-22 09:14 GMT
இரட்டை இருப்பிட சான்றிதழ் விவகாரம் தொடர்பாக தமிழக சுகாதார துறை வெளியிட்ட அரசாணைக்கு உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
மதுரை:

இரட்டை இருப்பிட சான்றிதழ் மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கையில் பங்கேற்கலாம் என தமிழக அரசின் சுகாதார துறை சமீபத்தில் அரசாணை வெளியிட்டது.

இதை எதிர்த்து திமுக எம்.எல்.ஏ. பழனிவேல் தியாகராஜன் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது.

அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இரட்டை இருப்பிட சான்று தொடர்பாக தமிழக அரசின் சுகாதார துறை வெளியிட்ட அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
 
இரட்டை இருப்பிட சான்றுகள் வழங்குவதை சரிபார்க்க நடைமுறைகள் இல்லை. இதனால் தமிழக அரசு கல்லூரிகளில் பிற மாநிலத்தவர்கள் தமிழக மாணவர்களை விட அதிக இடங்கள் பெற்று விடுகின்றனர். எனவே தமிழக அரசின் சுகாதார துறை பிறப்பித்த அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டார்.
Tags:    

Similar News