செய்திகள்

ராஜபாளையத்தில் பிளஸ்-2 மாணவர்கள் மீது தாக்குதல்: 6 பேர் கைது

Published On 2017-08-30 11:42 GMT   |   Update On 2017-08-30 11:42 GMT
ராஜபாளையத்தில் பிளஸ்-2 மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராஜபாளையம்:

ராஜபாளையம் ரெயில்வே பீடர் ரோட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி உள் து. இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் சோமையாபுரம் பகுதி மாணவர்களுக்கும், துரைச்சாமிபுரம் பகுதி மாணவர்களுக்கும் முன் விரோதம் காரணமாக அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது.

நேற்று மாலை பள்ளி முடிந்து சோமையாபுரம் பகுதியை சேர்ந்த 7 மாணவர்கள் முடங்கியார் ரோட்டில் உள்ள உழவர் சந்தை அருகே நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு துரைச்சாமிபுரத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் மற்றும் அதே பகுதியை சேர்ந்த வடக்கு கரிசல்குளம் அரசு பள்ளி மாணவர்கள், பாலிடெக்னிக் மாணவர்கள் என 15 பேர் கம்பு, கிரிக்கெட் மட்டை போன்றவற்றுடன் வந்தனர். அவர்கள் சோமையாபுரம் மாணவர்களை சரமாரியாக தாக்கி விட்டு தப்பினர்.

தாக்குதலில் சோமையாபுரத்தை சேர்ந்த தனசேகரன், கூடலிங்கம், தர்மர், முத்தையா ஆகிய 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மோதல் சம்பவம் குறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல்ஏசுதாஸ், சப்- இன்ஸ்பெக்டர் விஜி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட துரைச்சாமிபுரத்தை சேர்ந்த மாணவர்கள் முகிலன், கண்ணன், மோகன்ராஜ், கலையரசு, கவுதம், அஜித்குமார் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

தலைமறைவாக உள்ள கவியரசு, ராமமூர்த்தி, ராம் குமார், அழகுராஜ், முத்து மீலான் உள்பட சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News