செய்திகள்

போயஸ்கார்டனில் போலீசார் குவிப்பு - வெளி நபர்களுக்கு அனுமதி மறுப்பு

Published On 2017-08-18 00:11 GMT   |   Update On 2017-08-18 00:11 GMT
சென்னை போயஸ்கார்டன் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அந்த சாலை வழியாக செல்ல வெளி நபர்களுக்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
சென்னை:

சென்னை போயஸ்கார்டன் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அந்த சாலை வழியாக செல்ல வெளி நபர்களுக்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.

ஜெயலலிதா வாழ்ந்த ‘வேதா இல்லம்’ நினைவு இல்லம் ஆக்கப்படும். ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்று அதிரடி அறிவிப்பை நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போயஸ்கார்டன் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. வேதா இல்லத்துக்குள் யாரும் அத்துமீறி உள்ளே நுழைந்து விடாத வகையில் தடுப்புவேலிகளை அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



போயஸ்கார்டன் பகுதியில் வசிக்கும் மக்களை தவிர வெளி நபர்கள் அந்த சாலை வழியாக செல்ல போலீசார் அனுமதிக்க மறுத்துவிட்டனர். ‘வேதா இல்லம்’ அருகே செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகை, தொலைக்காட்சி நிருபர்கள், கேமராமேன்களையும் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

தியாகராயநகர் துணை கமிஷனர் அரவிந்தன், தேனாம்பேட்டை உதவி கமிஷனர் முத்தழகு ஆகியோர் மேற்பார்வையில், 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஷிப்டு முறையில் போயஸ்கார்டன் பகுதியில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News