செய்திகள்

அரசு பள்ளிகளை தரம் உயர்த்தகோரி கோட்டையை நோக்கி பா.ஜனதா பேரணி

Published On 2017-08-07 09:09 GMT   |   Update On 2017-08-07 09:09 GMT
அரசு பள்ளிகள் தரத்தை உயர்த்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய ஜனதா சார்பில் சென்னையில் இருந்து கோட்டையை நோக்கி பேரணி நடத்தினர்.
சென்னை:

தமிழக பா.ஜனதா இளைஞர் அணி சார்பில் சென்னையில் இன்று கோட்டையை நோக்கி பேரணி நடந்தது.

டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும், உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பேரணி நடந்தது.

இந்த பேரணி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து தொடங்கியது. பேரணிக்கு பா.ஜனதா மாநில இளைஞர் அணி தலைவர் வினோஜ்செல்வம் தலைமை தாங்கினார். அகில இந்திய இளைஞர் அணி தலைவர் பூனம் மகாஜன் பேரணியை தொடங்கி வைத்தார்.

தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தேசிய செயலாளர் முரளீதரராவ், கே.என். லட்சுமண், எச்.ராஜா, சி.பி. ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், மாநில இளைஞர் அணி துணைத் தலைவர் டாக்டர் ஆர்த்தி ஆனந்த், மாநில வக்கீல் பிரிவு செயலாளர் வக்கீல் தங்கமணி, ஜி.கே.எஸ். உள்பட ஏராளமான மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

பேரணியில் கலந்து கொள்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான தொண்டர்கள் வந்து குவிந்தனர். சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இருந்து கடற்கரைவரை போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. எழிலகம் அருகே தடுப்பு வேலிகள் அமைத்து கோட்டைக்கு தொண்டர்கள் சென்று விடாதப்படி தொண்டர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டு இருந்தனர்.

தமிழகத்தில் பா.ஜனதாவின் வளர்ச்சியை பார்வையிடுவதற்காக டெல்லியில் இருந்து இளைஞர் அணி நிர்வாகிகள் பலர் பார்வையாளர்களாக அனுப்பப்பட்டு இருந்தனர். அவர்கள் தனி மேடையில் அமர்ந்து கூட்டத்தை பார்த்தனர்.

காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் 500 பேர் பேரணியில் பங்கேற்றனர். கிண்டி கத்திப்பாராவில் இருந்து வாகனங்களில் புறப்பட்ட அவர்களை தேசிய பொதுக் குழு உறுப்பினர் வேதா சுப்பிரமணியம் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.
Tags:    

Similar News