செய்திகள்

ஊட்டியில் சட்டமன்ற பேரவை ஏடுகள் குழு தலைவர் ஆய்வு

Published On 2017-08-02 15:03 GMT   |   Update On 2017-08-02 15:04 GMT
ஊட்டி விருந்தினர் மாளிகையில் சட்டமன்ற பேரவை ஏடுகள் குழு தலைவர் செந்தில்பாலாஜி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

ஊட்டி:

ஊட்டி விருந்தினர் மாளிகையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை முன் வைக்கப்பட்ட ஏடுகள் குழு (2016-2018) தலைவர் செந்தில்பாலாஜி தலைமையில், கலெக்டர் இன்னசென்ட் திவ்யா முன்னிலையில் கதர் மற்றும் கிராமத் தொழில் பொருட்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து சட்டமன்றப் பேரவை முன் வைக்கப்பட்ட ஏடுகள் குழுத் தலைவர் செந்தில் பாலாஜி பேசியதாவது:-

“நம்முடைய நாட்டு மக்கள் முன்னேற தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை விரைவாக தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது. ஊட்டி கதரங்காடியினை சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.41.15 லட்சம் மதிப்பீட்டில் நவீனப் படுத்திடவும், மாவட்டத்திற்கு ஆண்டு தோறும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்வதால் அவர்களை கவர்ந் திடவும், கதர் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், அதன் மூலம் கதர் கிராமப் பொருட்களை பல்வேறு தரப்பினரும் அறிந்திடும் வகையில் ஊட்டியில் நடமாடும் கதரங்காடி செயல் படுத்த ரூ.35.29 லட்சம் மதிப்பீட்டில் திட்ட எடுத் துரையும் நீலகிரி மாவட்ட கலெக்டருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கதர் மற்றும் கிராமத்தொழில் தொடர்பான பல்வேறு ஆலோசனைகள் ஆய்வுக் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டு உள்ளது. கதர் வாரியத்தின் சார்பில் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கீழ் இயங்கும் 12 கூட்டுறவு சங்கங்கள் ரூ.60 லட்சம் நிதியுதவில் புணரமைக்கப்பட்டுள்ளது. 68 சர்வோதய சங்கங்களுக்கு ரூ.34.74 கோடி தள்ளு படி மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் சட்ட மன்றப் பேரவை முன் வைக்கப்பட்ட ஏடுகள் குழு உறுப்பினர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News