செய்திகள்

திருவொற்றியூரில் 150 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்

Published On 2017-07-24 09:42 GMT   |   Update On 2017-07-24 09:42 GMT
திருவொற்றியூரில் 150 ஆக்கிரமிப்பு வீடுகள் போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றப்பட்டன. பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.
திருவொற்றியூர்:

சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை 4-வது ரெயில் தடத்தில் புதிய ரெயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திருவொற்றியூர் நந்தி ஓடை குப்பத்தில் ரெயில்வே நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டிருந்தது. இது ரெயில் பாதை அமைக்க தடையாக இருந்தது. எனவே வீடுகளை அகற்ற ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

கும்மிடிப்பூண்டி மாதர்பாக்கத்தில் மாற்று இடம் வழங்கப்பட்டது. அதை மறுத்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அங்கு ஆக்கிரமித்து கட்டிய 150 வீடுகள் இன்று காலை ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன. பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

Tags:    

Similar News