செய்திகள்

துறைமுகத்தில் கண்டெய்னர் லாரிகள் திடீர் வேலை நிறுத்தம்

Published On 2017-06-08 08:34 GMT   |   Update On 2017-06-08 08:34 GMT
சென்னை துறைமுகத்தில் இன்று கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
ராயபுரம்:

சென்னை துறைமுகத்தில் கப்பலில் இருந்து இறக்கப்படும் சரக்குகள் கண்டெய்னர் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. இந்த நிலையில் காசிமேடு ஜீரோ கேட்டில் இன்று காலை 7.30 மணிக்கு திடீரென கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

கண்டெய்னர் லாரிகளில் அதிக பாரம் ஏற்றி செல்வதாக கூறி அதிக அபராதம் ஆர்.டி.ஓ. விதிப்பதாக கூறி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் கண்டெய்னர் லாரிகளை எண்ணூர் விரைவு சாலை, மாதவரம் மஞ்சப்பாக்கம், மீஞ்சூரில் சாலை ஓரம் நிறுத்தி இருந்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போக்குவரத்து துறை அதிகாரிகள், துறைமுக பொறுப்பு கழக அதிகாரிகள் சமாதானப் பேச்சில் ஈடுபட்டனர். இதையடுத்து வேலை நிறுத்த போராட்டம் 10.30 மணிக்கு வாபஸ் பெறப்பட்டது.
Tags:    

Similar News