செய்திகள்

வெளிநாட்டில் படிக்க இடம் பெற்று தருவதாக கூறி ஆராய்ச்சி மாணவரிடம் ரூ.5 லட்சம் மோசடி

Published On 2017-05-31 14:30 GMT   |   Update On 2017-05-31 14:30 GMT
வெளிநாட்டில் படிக்க இடம் பெற்று தருவதாக கூறி ஆராய்ச்சி மாணவரிடம் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் பணம் மோசடி செய்யப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுச்சேரி:

புதுவை வாழைக்குளம் பழனி கிராமணி தெருவை சேர்ந்தவர் டேவிட். இவரது மகன் ஆரோக்கியராஜ் (வயது 30). இவர் பி.எச்.டி. முடித்து விட்டு தெலுங்கானா மாநிலத்தில் கல்லூரி பேராசிரியராக உள்ளார். அவர் வெளிநாட்டில் ஆராய்ச்சி மேற்படிப்பு படிப்பதற்கு முயற்சி செய்தார்.

அவருக்கு வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் இடம் பெற்று தருவதாக கூறி முதலியார்பேட்டையை சேர்ந்த இளஞ்செழியன் (வயது 32). அவரது மனைவி தேவிகா ஆகியோர் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் பணம் வாங்கினார்கள்.

ஆனால், அவர்கள் படிப்பதற்கு இடமும் வாங்கி தரவில்லை. வாங்கிய பணத்தை திருப்பியும் கொடுக்கவிலலை.

இது குறித்து முத்தியால் பேட்டை போலீசில் ஆரோக்கியராஜ் புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் விசாரித்து வருகிறார்.

Tags:    

Similar News