செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் மினி லாரி மோதி வாலிபர் பலி

Published On 2017-05-25 12:22 GMT   |   Update On 2017-05-25 12:22 GMT
ஸ்ரீவில்லிபுத்தூரில் மினி லாரி மோதியதில் மோட்டார் சைக்கிளின் சென்ற வாலிபர் பலியானார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு நாயுடு தெருவைச் சேர்ந்தவர் செந்தில்பாண்டி (வயது 30). இவர் கிருஷ்ணன் கோவிலில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அவரது தம்பி விக்னேஷ்வரன், நண்பர் பாலசந்திரனுடன் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே வந்தபோது எதிரே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன்கள் ஏற்றிச்செல்லும் மினி லாரி வந்தது. அந்த லாரி எதிர்பாராதவிதமாக செந்தில்பாண்டி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். தனது கண் முன்பு விபத்தில் சகோதரன் பலியானதை கண்டு விக்னேஷ்வரன் அதிர்ச்சி அடைந்தார்.

பலியான செந்தில் பாண்டிக்கு ஜெயந்தி (27) என்ற மனைவியும், விஷ்ணு, விஷ்வம் (5) என்ற இரட்டைக் குழந்தைகளும் உள்ளனர்.

விபத்து குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

மினி லாரி டிரைவரான காதிபோர்டு காலனியை சேர்ந்த மணிவண்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News