செய்திகள்

முதல்வர் பழனிசாமியுடன் குமரி மாவட்ட அ.தி.மு.க.வினர் சந்திப்பு

Published On 2017-05-25 07:17 GMT   |   Update On 2017-05-25 07:17 GMT
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க.வினர் இன்று காலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மனு கொடுத்தனர்.
சென்னை:

கன்னியாகுமரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருப்பவர் விஜயகுமார் எம்.பி. இவர் மீது அங்குள்ள கட்சியினர் பல்வேறு புகார்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக அரசு பதவிகளுக்கு தி.மு.க.வினருக்கு ஆதரவாக இருப்பதாக குற்றம் சாட்டுகிறார்கள்.

எனவே முன்னாள் அமைச்சர் கே.டி.பச்சைமால் தலைமையில் அந்த மாவட்டத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சென்னைக்கு திரண்டு வந்தனர். அவர்கள் அவைத் தலைவர் அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோரை சந்தித்து மாவட்ட செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்தனர்.

இன்று காலையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மனு கொடுத்தனர். அப்போது, மாவட்ட செயலாளரின் நடவடிக்கையால் மாவட்டத்தில் கட்சி பணிகள் முடங்கி உள்ளதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுத்து அவரை மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.

அவருடன் முன்னாள் மாவட்ட செயலாளர்கள் சிவசெல்வராஜன், ஜான் தங்கம், பேரவை இணை செயலாளர் சுந்தர்நாத், காரவிளை செல்வன், வக்கீல் சுந்தரம், வடிவை மாதவன் உள்பட பல நிர்வாகிகள் வந்திருந்தனர்.
Tags:    

Similar News