செய்திகள்

திருவண்ணாமலை நகராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

Published On 2017-05-23 18:20 GMT   |   Update On 2017-05-23 18:20 GMT
திருவண்ணாமலை நகராட்சி அலுவலகம் முன்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை நகராட் சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சி நகர செயலாளர் தங்கமணி தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் வீரபத்திரன், மாவட்டக்குழு உறுப்பினர் தமிழ்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரக்குழு உறுப்பினர் கே.சரவணன் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், திருவண்ணாமலையை தூய்மையான நகரமாக, நகராட்சி நிர்வாகம் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை 15 நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும்.

திருவண்ணாமலை நகரின் வளர்ச்சிக்கு ஏற்ப துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும். திருவண்ணாமலையில் உள்ள 39 வார்டுகளிலும் கழிவுநீர் கால்வாய்களை சுத்தப்படுத்தி குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும்.

திருவண்ணாமலைக்கு சுற்றுலா வரும் பஸ், வேன் மற்றும் கார்களுக்கு உரிய கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
இதில் நகரக்குழு உறுப்பினர்கள் சந்திரசேகரன், வெங்கடேசன், ஆர்.சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News