search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி"

    • திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து கருணாஸ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்
    • உலகில் பொய் சொல்கிறவர்களில் போட்டி வைத்தால் முதல் இடத்தில் மோடியும், இரண்டாவது இடத்தில் அண்ணாமலையின் இருப்பார்கள்

    திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து நிலக்கோட்டை பகுதியில் முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத் தலைவர் கருணாஸ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

    அப்பகுதியில் உள்ள பள்ளபட்டி, அணைப்பட்டி, விறுவீடு பகுதிகளில் நடிகர் கருணாஸ் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

    அப்போது பேசிய அவர், "ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம் என இந்திய மக்களிடையே மோடி பிரிவினையை ஏற்படுத்த நினைக்கிறார். ஆனால் அதற்கு வாய்ப்பில்லை ராஜா ஒருபோதும் வாய்ப்பில்லை.

    படர்தாமரை உடலுக்கு கேடு, ஆகாயத்தாமரை குளத்திற்கு கேடு, பாஜகவின் தாமரை இந்திய நாட்டிற்கே கேடு என்றும், எனவே பிஜேபி மீண்டும் ஆட்சிக்கு வர ஒருபோதும் அனுமதிக்க கூடாது.

    உலகில் பொய் சொல்கிறவர்களில் போட்டி வைத்தால் முதல் இடத்தில் மோடியும், இரண்டாவது இடத்தில் அண்ணாமலையும் இருப்பார்கள். இவர்கள் வாயால் சுட்ட வடைகள் கொஞ்சம் நஞ்சம் இல்லை" என்று அவர் தெரிவித்தார். 

    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இஸ்ரேலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் தேரடி திடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இஸ்ரேலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் அசோக்ராஜ் தலைமை தாங்கினார். இதில் தென்காசி மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்துப்பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் இசக்கி துரை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் லிங்க வளவன், பார்வர்டு பிளாக் தென்காசி மாவட்ட செயலாளர் தங்கப்பாண்டியன், ம.தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் பொன் ஆனந்தராஜ், ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட தலைவர் அப்பாஸ், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் திவான் மைதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் தி.மு.கவை சேர்ந்த அப்பாஸ், அப்துல் ரகுமான், ம.தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் முகமது ஹக்கீம், சங்கரன்கோவில் நகர செயலாளர் ரத்னவேல் குமார், ஒன்றிய செயலாளர் சசி முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பாலுச்சாமி, செல்வின், செந்தில்வேல், வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் நடராஜன், புளியங்குடி நகர செயலாளர் மாரியப்பன், திருவேங்கடம் தாலுகா செயலாளர் கருப்பசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் மனுவேல்ராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் பீர் மைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று மார்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.
    • கோபி செட்டிபாளையம் பஸ் நிலையம், அந்தியூர் ரவுண்டானா, கடம்பூர் பஸ் நிலையம் ஆகிய இடங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஈரோடு:

    விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை போன்ற காரணங்களுக்காக மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று மார்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி ஈரோட்டில் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவதற்காக கட்சியின் மாநில குழு உறுப்பினர் ராதிகா தலைமையில் நிர்வாகிகள் சுப்பிரமணி, ஆர்.கோமதி, பழனிசாமி, சுந்தர்ராஜன், பொன் பாரதி உள்பட பலர் காளை மாட்டு சிலை பகுதியில் இன்று காலை திரண்டனர். அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

    தொடர்ந்து ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், டவுன் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆறுமுகம் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

    மறியல் போராட்டத்துக்கு அனுமதி இல்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் கூறினர். இதையடுத்து அங்கேயே சாலையில் அமர்ந்து அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து போலீஸ் வாகனங்களில் ஏற்றினர்.

    அப்போது அங்கிருந்து ஒரு சிலர் வேகமாக ஈரோடு ரெயில் நிலையம் நோக்கி ஓடினர். அவர்களை ரெயில் நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியில் வைத்து போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மறியலில் ஈடுபட முயன்ற 250-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரையும் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

    இதேபோல் கோபி செட்டிபாளையம் பஸ் நிலையம், அந்தியூர் ரவுண்டானா, கடம்பூர் பஸ் நிலையம் ஆகிய இடங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து நடந்தது
    • அதிகாரிகள் பேச்சு வார்த்தை

    வந்தவாசி:

    வந்தவாசியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டாரக் குழு உறுப்பினர் சேட்டு தலைமை தாங்கினார். கிளை உறுப்பினர்கள் சண்முகம் முனியன் ஏழுமலை ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில செயற்குழு உறுப்பினர் வி.செல்வன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.முரளி, வட்டார செயலாளர் அப்துல் காதர் ஆகியோர் பேசினர்.

    இதில் கலந்து கொண்டவர்கள் கீழ் கொடுங்கலூர் கிராம கூட்டுச்சாலையில் சரியான முறையில் ஆக்கிரமிப்பு அகற்றாததை கண்டித்தும் மழைநீர் வடிகால் கால்வாயை சரியான முறையில் அமைக்கவில்லை என்று கூறியும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப் பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் பொறுப்பாளர்கள் வழக்கறிஞர் சுகுமார், ராதாகிருஷ்ணன், தீபநாதன், தேவி, ஏழுமலை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அவர்களிடம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன்பேரில் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

    • ராஜபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • ஆவரம்பட்டி காளியம்மன் கோவில் அருகே நடந்த போராட்டத்திற்கு சரவணன், வீரமணி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    ராஜபாளையம்

    ராஜபாளைத்தில் 2018-ம் ஆண்டு பாதாள சாக்கடை திட்டம், தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம், ெரயில்வே மேம்பால பணி ஆகியவை ெதாடங்கப்பட்டது. 5 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னரும் இந்த பணிகள் நிறைவடையாமல் உள்ளது.

    இந்த பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும், இந்த பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளை சரி செய்ய கோரியும், 3 மடங்கு உயர்த்தப்பட்ட குடிநீர் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரியும், சொத்து வரி விகிதத்தை குறைக்க கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் பிப்ரவரி 12 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    சோழராஜா பட்டியில் நடந்த போராட்டத்திற்கு செல்வராஜ், சுப்பிரமணியன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஆவரம்பட்டி காளியம்மன் கோவில் அருகே நடந்த போராட்டத்திற்கு சரவணன், வீரமணி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    சம்பந்தபுரம் போஸ் பார்க் ஆட்டோ நிறுத்தம் அருகே நடந்த போராட்டத்திற்கு முருகானந்தம், பால மஸ்தான் தலைமை தாங்கினர். வடக்கு மலையடிப்பட்டி 4 முக்கில் நடந்த போராட்டத்திற்கு செல்வம், சன்னாசி தலைமை தாங்கினர். தாலுகா அலுவலகம் அருகே நடந்த போராட்டத்திற்கு அய்யனார், குருசாமி தலைமை தாங்கினர்.

    எம்.ஜி.ஆர். நகரில் நடந்த போராட்டத்திற்கு செந்தமிழ் செல்வன் தலைமை தாங்கினார். தெற்கு அழகை நகரில் நடந்த போராட்டத்திற்கு சந்திரன் தலைமை தாங்கினார். ஆர். ஆர்.நகரில் நடந்த போராட்டத்திற்கு பொன்னுசாமி, கார்த்திகா தலைமை தாங்கினர்.

    முனியம்மன் பொட்டலில் நடந்த போராட்டத்திற்கு மாரிமுத்து, பழனிச்சாமி தலைமை தாங்கினர். பட்டுக்கோட்டை மன்றம் அருகே நடந்த போராட்டத்திற்கு ஜானகி தலைமை தாங்கினார். மதுரை கடை தெருவில் நடந்த போராட்டத்திற்கு ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். சின்ன சுரக்காய் பட்டியில் நடந்த போராட்டத்திற்கு ஜெகன், மைதிலி தலைமை தாங்கினர்.

    மாவட்ட செயலாளர் அர்ஜூனன், மாநில குழு உறுப்பினர் மகா லட்சுமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் குருசாமி, மாவட்ட குழு உறுப்பினர் ராமர், நகர செயலாளர் மாரியப்பன், மூத்தநிர்வாகி கணேசன், நகர் குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், பிரசாந்த் ஆகியோர் பேசினர்.

    • சிவகிரி அருகே உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் தங்களது தோட்டத்தில் உள்ள கரும்புகளை வெட்டி அனுப்பி வைத்தனர்.
    • ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

    சிவகிரி:

    சிவகிரி தாலுகா பகுதியில் உள்ள விவசாயிகள் சிவகிரி அருகே உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு தங்களது தோட்டத்தில் உள்ள கரும்புகளை வெட்டி அனுப்பி வைத்தனர். நிர்வாகத்தினர் அதற்குரிய பணத்தை வழங்காமல் வெகு நாட்களாக காலம் தாழ்த்தியும், ஆலையை நடத்தாமல் மூடியதாலும், விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை தராத நிலையில் நீண்ட காலமாக இருப்பதால் விவசாயிகள் மிகவும் அல்லல்பட்டு வருகின்றனர்.

    ஆகவே அரசு உடனே தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி சிவகிரி அருகே உள்ள ஆலையையும், தஞ்சாவூர் பகுதியில் உள்ள ஆலையையும் உடனே திறப்பதற்கும், விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை வழங்குவதற்கும் அரசு ஏற்பாடு செய்து தர வேண்டும் என வலியுறுத்தி சிவகிரி நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பாக பஸ் நிலையம் அருகே காந்திஜி கலையரங்கம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஒன்றியத் தலைவர் சிவசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் சக்திவேலு, சிவகிரி நகர கிளைச்செயலாளர் ரவிந்திரநாத் பாரதி, வாசுதேவநல்லூர் சுப்பையா, மாவட்ட தலைவர் வக்கீல் நாகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஆர்ப்பாட்டத்தில் மத்திய குழு உறுப்பினர், கோவை மாவட்ட செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    • போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அன்னூரில் தொழிற்பூங்கா அமைக்க வெளியிட்ட அரசாணையை திரும்ப பெற வேண்டும்.

    அன்னூர்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், அன்னூர் தாலுகாக்களில் உள்ள 6 ஊராட்சிகளில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழகம் சார்பில் தொழிற்பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதற்காக 3,731 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்டது.

    தொழிற்பூங்கா அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் ஆர்ப்பாட்டம், கடையடைப்பு, உண்ணாவிரதம் என தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தி உள்ளனர்.

    இந்த நிலையில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகவும், தொழிற் பூங்கா அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அன்னூர் கைகாட்டி பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் மத்திய குழு உறுப்பினர், கோவை மாவட்ட செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அன்னூரில் தொழிற்பூங்கா அமைக்க வெளியிட்ட அரசாணையை திரும்ப பெற வேண்டும்.

    பறிக்காதே, பறிக்காதே பெருமுதலாளிகளின் நலன் காக்க விவசாய நிலங்களை பறிக்காதே என்றும், திரும்ப பெறு திரும்ப பெறு நிலம் கையகப்படுத்த வெளியிடப்பட்ட அரசாணையை திரும்ப பெறு என்பது உள்பட பல்வேறு கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் நமது நிலம் நமதே அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    ×