மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் `எக்ஸ்' தள கணக்கு `திடீர்'முடக்கம்

மர்ம நபர்கள் சில விளம்பரங்களை வெளியிட்டுள்ளதாகவும் தெரிகிறது.தமிழ் மாநிலக் குழுவின் ‘எக்ஸ்’ தள கணக்கு நேற்று முடக்கப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் `எக்ஸ்' தள கணக்கு `திடீர்'முடக்கம்
Published on

சென்னை:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலக் குழுவின் 'எக்ஸ்' தள கணக்கு நேற்று முடக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 'எக்ஸ்' தள பக்கத்தை 'ஹேக்' செய்த மர்ம நபர்கள் அதில் சில விளம்பரங்களை வெளி யிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு 'எக்ஸ்' தள பக்கம் திடீரென முடக்கப்பட்டுள்ளது. இதில் வெளியிடப்படும் செய்திகள் ஏதும் கட்சி சார்ந்தது அல்ல. 'எக்ஸ்' தளத்தை தொடர்புகொண்டுள்ளோம். இந்த பக்கம் விரைவில் மீட்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com