சங்கரன்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இஸ்ரேலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
சங்கரன்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் தேரடி திடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இஸ்ரேலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் அசோக்ராஜ் தலைமை தாங்கினார். இதில் தென்காசி மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்துப்பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் இசக்கி துரை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் லிங்க வளவன், பார்வர்டு பிளாக் தென்காசி மாவட்ட செயலாளர் தங்கப்பாண்டியன், ம.தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் பொன் ஆனந்தராஜ், ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட தலைவர் அப்பாஸ், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் திவான் மைதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.

ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் தி.மு.கவை சேர்ந்த அப்பாஸ், அப்துல் ரகுமான், ம.தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் முகமது ஹக்கீம், சங்கரன்கோவில் நகர செயலாளர் ரத்னவேல் குமார், ஒன்றிய செயலாளர் சசி முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பாலுச்சாமி, செல்வின், செந்தில்வேல், வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் நடராஜன், புளியங்குடி நகர செயலாளர் மாரியப்பன், திருவேங்கடம் தாலுகா செயலாளர் கருப்பசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் மனுவேல்ராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் பீர் மைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com