செய்திகள்

பெரியபாளையம் அருகே கோவில் விழாவில் கோஷ்டி மோதல்

Published On 2017-05-22 08:46 GMT   |   Update On 2017-05-22 08:46 GMT
பெரியபாளையம் அருகே கோவில் விழாவில் கோஷ்டி மோதலில் இருதரப்பினரையும் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரியபாளையம்:

பெரியபாளையம் அருகே உள்ள திருக்கண்டலம் அண்ணா நகரில் உள்ள கங்கையம்மன் கோவிலில் பொங்கல் வைக்கும் திருவிழா நடைபெற்றது.

திருக்கண்டலத்தை சேர்ந்த அஜித்குமார். தனது மோட்டார் சைக்கிளை சாலையில் நிறுத்தி வைத்திருந்தார். அப்போது அங்கு வந்த நெய்வேலி கிராமம் அம்பேத்கார் நகரை சேர்ந்த சரவணன்,சங்கர், கார்த்திக் ஆகியோர் சாலையில் உள்ள மோட்டார் சைக்கிளை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

கோவிலில் பொங்கல் வைத்துக் கொண்டிருந்தவர்கள் அஜித்குமாருக்கு ஆதரவாக பேசினர். இதனால் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

இதனை பார்த்து பயந்து போன பொங்கல் வைத்து கொண்டு இருந்தவர்கள் அங்கிருந்து சிதறி ஓடினர். இந்த தாக்குதலில் அஜித் குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரது மோட்டார் சைக்கிளும் நொறுக்கப்பட்டது.

இது குறித்து இரு தரப்பினரும் பெரியபாளையம் போலீசில் புகார் செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் இருதரப்பினரையும் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News