செய்திகள்

கொடைக்கானலில் பலத்த மழை

Published On 2017-04-27 15:49 GMT   |   Update On 2017-04-27 15:49 GMT
வறட்சி நீடித்து வந்த நிலையில் கொடைக் கானலில் பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கொடைக்கானல்:

மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலில் வருடம் முழுவதும் இதமான சீதோஷ்ணம் நிலவும். ஆனால் தற்போது பருவமழை பொய்த்து போனதால் கடும் வறட்சி நீடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர். நகர் பகுதிகளில் குடிநீர் 20 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வினியோகம் செய்யப்பட்டது. வறட்சியின் காரணமாக குடிநீர் மட்டு மல்லாது உப்பு தண்ணீருக்கே தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதனால் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் கொடைக்கானலில் நிலவிய பருவநிலை மாற்றத்தினால் ஏமாற்றம் அடைந்தனர். இதனிடையே நேற்றிரவு திடீரென சாரல் மழையாக தொடங்கி பலத்த மழையாக ஒரு மணிநேரம் நீடித்தது.
இதனால் பூமி குளிர்ந்து வெப்பம் தணிந்தது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கொடைக்கானலில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீருக்காக சாலை மறியல் போராட்டம் ஆங்காங்கே நடந்து வருகிறது. இந்நிலையில் கொடைக்கானலில் பெய்துள்ள கோடை மழையால் அணைகளில் நீர்வரத்து அதிகரித்து குடிநீர் தட்டுப்பாடு நீங்கும் நிலை உள்ளது. எனவே இந்த மழை தொடர்ந்தால் மட்டுமே விவசாய பணிகள் செய்யமுடியும் என்றனர்.            

Similar News