செய்திகள்

அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மதியம் 3 மணிக்கு ஆலோசனைக் கூட்டம்: தினகரன் அறிவிப்பு

Published On 2017-04-18 19:48 GMT   |   Update On 2017-04-18 19:49 GMT
அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மதியம் 3 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிகே தினகரன் அறிவித்துள்ளார்.
சென்னை:

தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், நேற்று இரவு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடனான சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்.

கட்சியின் எதிர்காலம் குறித்தும், ஆட்சியை தொடர்ந்து நடத்துவது குறித்தும் அமைச்சர்கள் இன்று ஆலோசனை நடத்தினோம்.
அதில் கட்சியின் ஒட்டுமொத்த கருத்து, தமிழ்நாட்டில் உள்ள அ.தி.மு.க. தொண்டர்களின் ஒட்டுமொத்த விருப்பமும், மக்களின் ஒட்டுமொத்த விருப்பமும் என்னவென்றால், கட்சியும் ஆட்சியும் ஒரு குடும்பத்தின் தலையீடு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான்.

வெளிப்படையாக சொல்வதென்றால், டி.டி.வி. தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினரை கட்சியில் இருந்து முழுமையாக ஒதுக்கி வைத்து விட்டு கட்சியையும் ஆட்சியையும் நடத்த வேண்டும் என்பதே அடிமட்ட தொண்டர்களின் விருப்பம் என்று கூறியிருந்தார். இது ஒருபுறம் இருக்க டிடிவி தினகரனுக்கு 8 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இன்று பிற்பகல் 3 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக (அம்மா) அணி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் பங்கேற்க அதிமுக எம்.எல்.ஏக்கள், மாவட்டச் செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

Similar News