செய்திகள்
திருமாவளவன்

பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தேர்தலில் அதிமுக தோல்வி- திருமாவளவன் சொல்கிறார்

Published On 2021-05-03 13:07 GMT   |   Update On 2021-05-03 13:07 GMT
கலைஞர் வடிவில் ஸ்டாலின் இருக்கிறார் என்பதை தமிழக மக்கள் இந்த வெற்றியின் மூலம் உணர்த்தியுள்ளனர் என திருமாவளவன் தெரிவித்தார்.
சென்னை:

திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தேர்தலில் அதிமுக , பாமக கட்சிகள் தோல்வியை தழுவின. சனாதன சக்திகளுக்கு தமிழ் மண்ணில் இடமில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் மக்கள் தீர்ப்பளித்துள்ளனர்.

சமூக நீதியை காப்பாற்றுவதில், மாநில உரிமைகளை காப்பாற்றுவதில் முழுவீழ்ச்சில் மு.க ஸ்டாலின் பணியாற்றுவார். கொரோனா நெருக்கடியில் இருந்து மக்களை காப்பாற்ற மு.க ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார். கலைஞர் வடிவில் ஸ்டாலின் இருக்கிறார் என்பதை தமிழக மக்கள் இந்த வெற்றியின் மூலம் உணர்த்தியுள்ளனர் என தெரிவித்தார்.
Tags:    

Similar News