செய்திகள்
எல்.முருகன்

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன் முன்னிலை

Published On 2021-05-02 04:55 GMT   |   Update On 2021-05-02 04:55 GMT
தாராபுரம் தொகுதியில் முதல் சுற்றில் பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன், தி.மு.க. வேட்பாளர் கயல்விழியை விட கூடுதலாக 479 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்ற பா.ஜ.க. சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன், தி.மு.க. சார்பில் கயல்விழி செல்வராஜ், அ.ம.மு.க. சார்பில் கலாராணி, மக்கள் நீதி மய்யம் சார்பில் சார்லி, நாம் தமிழர் கட்சி சார்பில் ரஞ்சிதா என மொத்தம் 14 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இங்கு மொத்தமுள்ள 2லட்சத்து 58 ஆயிரத்து 547 வாக்காளர்களில் 1லட்சத்து 91 ஆயிரத்து 709 வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்திருந்தனர். ஓட்டு சதவீதம் 74.15. இத்தொகுதியின் வாக்குகள் 25 சுற்றுகளாக எண்ணப்படுகிறது.

முதல் சுற்று எண்ணிக்கையில் ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-

எல்.முருகன் (பா.ஜ.க.) -1343

கயல்விழி (தி.மு.க.)-864.

முதல் சுற்றில் பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன், தி.மு.க. வேட்பாளர் கயல்விழியை விட கூடுதலாக 479 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

Tags:    

Similar News