செய்திகள்
கேஎஸ் அழகிரி

தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய கே.எஸ்.அழகிரி

Published On 2021-03-20 09:04 GMT   |   Update On 2021-03-20 09:04 GMT
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று காலை திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு பிரசாரத்தை தொடங்கினார்.
சென்னை:

காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி இன்று முதல் ஏப்ரல் 3-ந் தேதி வரை தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

கே.எஸ்.அழகிரி இன்று காலை திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு பிரசாரத்தை தொடங்கினார். இதையொட்டி திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அவர், வேளச்சேரி தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். இன்று மாலை துறைமுகம் தொகுதியில் பிரசாரம் செய்கிறார். நாளை (21-ந்தேதி) கொளத்தூர் மற்றும் பொன்னேரி தொகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.

22-ந் தேதி (திங்கட்கிழமை) ஸ்ரீபெரும்புதூர், சோளிங்கர் தொகுதிகளில் பிரசாரம் செய்கிறார். 23-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காட்பாடி, ஊத்தங்கரையிலும், 24-ந்தேதி (புதன்கிழமை) கள்ளக்குறிச்சியிலும் பிரசாரம் செய்கிறார்.

26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) பென்னாடம், விருத்தாச்சலத்தில் பிரசாரம் செய்கிறார். 27-ந் தேதி (சனிக்கிழமை) வடலூர், பண்ருட்டியிலும், 28-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கடலூர், புவனிகிரியிலும், 29-ந் தேதி (திங்கட்கிழமை) காட்டுமன்னார் கோவிலிலும், 30-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மயிலாடுதுறையிலும், 31-ந் தேதி (புதன்கிழமை) ஈரோடு, உடுமலைப்பேட்டையிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.

ஏப்ரல் 1-ந் தேதி (வியாழக்கிழமை) கோவை தெற்கு தொகுதியிலும், 2-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஊட்டியிலும் பிரசாரம் செய்கிறார்.

3-ந் தேதி (சனிக்கிழமை) மதுரை மேலூரில் பிரசாரத்தை முடிக்கிறார்.
Tags:    

Similar News